அகமதாபாத்: கும்பமேளா நடைபெற்று ஹரித்வாரில் லட்சக்கணக்கான யாத்ரிகள், கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளை கடைபிடிக்காததால், ஹரித்வார் கொரோனா ஹாட்ஸ்பாட்டாக மாறி உள்ளது. இதையடுத்து, அங்கு சென்று விட்டு குஜராத் மாநிலம் அகமதாபாத் திரும்பிய  குஜராத்தியர் 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

கும்பமேளா விழாவில்வ கலந்துகொண்டு திரும்பும் நபர்களுக்கு  குஜராத் அரசு கொரோனா சோதனையை கட்டாயமாக்கி உள்ளது. அதன்படி, அகமதாபாத்தின் சபர்மதி நிலையத்தில் வந்திறங்கிய குஜராத்தியர்களுக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில்,  23  பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள குஜராத் மாநிலம், கும்பமேளா சூப்பர் ஸ்ப்ரெடர் அகமதாபாத்தை மாறிவிடுமோ என்ற  அச்சம் கொண்டுள்ளது.

இந்தியாவில் இதுவரை கொரோனா காரணமாக ஒரு லட்சத்து எழுபத்து மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்று அதிகாரபூர்வ புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. பல மாநிலங்களில் மருத்துவமனைகளில் படுக்கைகள், ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், மருந்துகளுக்கு கடுமையான பற்றாக்குறை இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன. அதிகரித்து வரும் பாதிப்பு காரணமாக  சிகிச்சை பெற மருத்துவமனையில் சேர மக்கள் வீதிகளில் அலைந்து கொண்டிருக்கிறார்கள். இடுகாடுகளில் டோக்கன் முறை பின்பற்றப்படுகிறது.

இந்தச் சூழ்நிலையில், பாஜக ஆட்சி செய்யும் உத்தராகண்டில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் கும்ப மேளா, அக்கட்சியின் இந்துத்துவ அரசியலுடன் தொடர்புடையதாகவே பார்க்கப்படுகிறது.கும்பமேளாவில் லட்சக்கணக்கானோர் பங்கேற்பது ஒரு `சூப்பர் ஸ்ப்ரெட்டர்’ நிகழ்வு என்றே கருதப்படுகிறது.

கும்ப மேளா தொடங்கியதிலிருந்து இப்போது வரை எத்தனை கோவிட் நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், அங்கு சென்று வருவோர் பலருக்கு  கொரோனா தொற்று உறுதியாகி வருகிறது.

ஆனால், பொதுமக்கள் எதையும் கண்டுகொள்ளாமல், ஹரித்வாரில் குழுமி வருகின்றனர். இது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.