எந்தவொரு தகவலுமே இல்லாமல் வெளியான ‘குஞ்சன் சக்ஸேனா’ ட்ரெய்லர்….!

Must read

கரண் ஜோஹரின் ‘தர்மா புரொடக்‌ஷன்ஸ்’ தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘குஞ்சன் சக்ஸேனா: தி கார்கில் கேர்ள்’.

இதில் குஞ்சன் சக்ஸேனா கதாபாத்திரத்தில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடித்துள்ளார்.

‘குஞ்சன் சக்ஸேனா’ படத்தின் ட்ரெய்லர் ஆகஸ்ட் 1-ம் தேதி யூடியூப் தளத்தில் வெளியிடப்பட்டது. ஆனால் எந்தவொரு தகவலுமே இல்லாமல் முன்னறிவிப்பு ஏதுமில்லாமல் இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

வாரிசு அரசியல் சர்ச்சை குறித்துப் பேசப்படும் என்பதாலேயே, எந்தவொரு தகவலுமே இல்லாமல் வெளியிட்டுள்ளனர் என கூறப்படுகிறது . ஏப்ரல் 12-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள படத்திலாவது, கரண் ஜோஹர் பெயர் இருக்குமா என்பது தான் தற்போது அனைவருடைய கேள்வியாக இருக்கிறது.

More articles

Latest article