வட மாநிலங்களில் நேற்று (03.08.20) ரக்‌ஷா பந்தன் பண்டிகை கொண்டாடப்பட்டது.

இந்நிலையில் தான் நடிக்கும் ‘ரக்‌ஷா பந்தன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் அக்‌ஷய் குமார் வெளியிட்டுள்ளார். இப்படத்தைத் தனது சகோதரிக்கு சமர்ப்பணம் செய்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஆனந்த் எல்.ராய் உடன் இணைந்து இப்படத்தை என் அன்புத் தங்கை அல்காவும் தயாரித்து வழங்குவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. என் வாழ்வின் மிகச்சிறந்த படங்களில் ஒன்றை எனக்குக் கொடுத்ததற்கு அவருக்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை என அக்ஷய்குமார் அதில் பதிவிட்டுள்ளார் .

https://www.instagram.com/p/CDapO5LHH2N/

ஆனந்த் எல்.ராய் இயக்கும் இப்படம் அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் திரைக்கு வரும் என்று கூறப்படுகிறது.