சென்னை: கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக டாக்டர் வி.கீதாலட்சுமியை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி  நியமித்தார்.

கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக கிருட்டிணமூர்த்தி இருந்து வந்தார். அவரது பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் புதியதுணைவேந்தர் நியமிக்கப்பட்டுள்ளார்.

கோவை வேளாண் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டின்கீழ் மாநிலம் முழுவதும் 14 உறுப்புக் கல்லூரிகள், 28 இணைப்புக் கல்லூரிகள் உள்ளன. பல்கலைக்கழகத்தில் வேளாண்மை, தோட்டக்கலை என 11 பட்டப்படிப்புகள் கற்பிக்கப்பட்டு வருகின்றன.

தற்போது கோவை வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ள கீதாலட்சுமி,  கல்வி பணியில் 26 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர் 3 ஆண்டுகள் பதவியில் இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.  டாக்டர் வி. கீதாலட்சுமி 3 புதிய ரக விதைகளையும், 8 புதிய தொழில்நுட்பங்களையும் கண்டறிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.