சென்னை

ன்று முதல் வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு  சிலிண்டரின் விலை  உயர்ந்துள்ளது.

மத்திய அரசு சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களைக் கருத்தில் கொண்டு எண்ணெய் நிறுவனங்களே எரிவாயு விலையைத் தீர்மானித்துக்கொள்ளலாம் என்று ஏற்கெனவே அறிவித்துள்ளது.

அதன் அடிப்படையில் மாதத்திற்கு இரண்டு முறை எண்ணெய் நிறுவனங்கள் எரிவாயு விலையைத் தீர்மானிக்கும். அந்த வகையில் தற்போது வணிக பயன்பாட்டு எரிவாயு சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது.

இன்று முதல் சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 12 ரூபாய் 50 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளன.

சென்னையில் நேற்று வரை வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் ரூ. 1924 ரூபாய் 50 காசுகள் என விற்பனையாகி வந்த நிலையில் இன்று முதல் 1,937 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

எனவே உணவு விடுதிகளில் உணவு பொருட்களின் விலை அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.  அதே வேளையில் சென்னையில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை மாற்றமின்றி 918 ரூபாய் 50 காசுகள் என்ற நிலை நீடிக்கிறது.