சென்னை

ரும் பிப்ரவரி 10 ஆம் தேதிக்குள் அரசுப் பள்ளிகளில் ஆண்டு விழா நடத்த வேண்டும் எனத் தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

மாணவர்களின் ஒட்டுமொத்த ஆளுமை வளர்ச்சிக்கு , அம்மாணவனின் வகுப்பறை கற்றல் அனுபவங்களும் , கல்வி இணைச் செயல்பாடுகள் மற்றும் புற கல்விச் செயல்பாடுகளில் அம்மாணவர்கள் சிறப்பான பங்களிப்பும் காரணமாக அமைகின்றன.

ஒரு கல்வி ஆண்டு முழுவதும் பள்ளியில் நிகழும் தொடர்ச்சியான கல்வி மற்றும் கல்விசார் செயல்பாடுகளில் மாணவர்களின் பங்கேற்பினை , ஆண்டு இறுதியில் மாணவர்கள் அவர்கள் தம் பெற்றோர்கள் முன்னிலையில் வெளிப்படுத்த நல்வாய்ப்பாக அமைவது பள்ளி ஆண்டு விழாவாகும்.

இதையொட்டி தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அந்த உத்தரவில்

:தமிழகத்தில் மொத்தம் 37,576 அரசுப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த அரசு பள்ளிகளில் வரும் பிப்ரவரி மாதம் 10 ஆம் தேதிக்குள் ஆண்டு விழா நடத்த வேண்டும்;  அந்தந்த பள்ளியின் மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப நிதி அளிக்கப்படும்.   இதற்காக மொத்தம் ரூ. 14.93 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”

என்று அறிவிக்கப்பட்டுள்ளது;.