திருப்பதி:  கொரோனா தொற்று காரணமாக, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நிறுத்தி வைக்கப் பட்ட  இலவச தரிசன டிக்கெட் இன்று முதல் மீண்டும் தொடங்கி உள்ளது.
கொரோனா தொற்று பரவல் காலரணமாக நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்ட தால், கோயில்கள், கல்வி நிறுவனங்கள் உள்பட அனைத்தும் மூடப்பட்டன. பின்னர் ஊரடங்கில் மத்திய மாநில அரசுகள் அளித்த தளர்வுகளால், ஏழுமலையான் கோவில் மீண்டும்  பல்வேறு கட்டுப் பாடுகளுடன் திறக்கப்பட்டு, பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது.
அதன்படி திருப்பதி ஏழுமலையான் கோவில்  ஜூன் 11 முதல் ரூ.300 டிக்கெட் 3000 இலவச தரிசன டிக்கெட் வழங்கப்பட்டது. கொரோனாவால் அதிகம் பேர் பாதிக்கப்பட்டதால் மீண்டும் ஜூலை 20-ம் தேதி தரிசன அனுமதி நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில், இன்றுமுதல் மீண்டும் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  இன்று முதல் மீண்டும் இலவச தரிசன டிக்கெட் வழங்கப்பட்டு வருகிறது.