Skip to content
  • Thu. Sep 17th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
தமிழ் நாடு

எச்.வசந்தகுமார் உடலுக்கு கே.எஸ்.அழகிரி கண்ணீர் அஞ்சலி…

Aug 29, 2020

சென்னை: மறைந்த காங்கிரஸ் எம்.பி. எச்.வசந்தகுமார் உடலுக்கு, தி.நகர் நடேசன் தெருவில் உள்ள வீட்டில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினார். அப்போது அவர் கதறி அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

உடல்நலப் பாதிப்பு காரணமாக உயிரிழந்த குமரி மாவட்ட காங்கிரஸ் எம்.பி. எச்.வசந்தகுமார் உடல் அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து காங்கிரஸ் கொடி போர்த்தப்பட்டு தி நகர் நடேசன் தெருவில் உள்ள அவரது வீட்டிற்கு இன்று அதி காலை எடுத்து வரப்பட்டது. அங்கு அவரது நிறுவன ஊழியர்கள், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

எச்.வசந்தகுமார் உடலுக்கு அவரது உறவினர்கள் மற்றும் வசந்த் & கோ நிறுவன நிறுவன ஊழியர்கள் முதலில் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து,  பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். வணிகர்சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா உள்பட வணிகர்கள், அரசியல் கட்சியினர் என ஏராளமானோர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிலையில் வசந்தகுமார் உடலுக்கு மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கண்ணீர் அஞ்சலி செலுத்தினார். அதைத்தொடர்ந்து அவரது மனைவி மற்றும் மகன்களுக்கு ஆறுதல் கூறினார்.

காலை 10.30 மணிக்குமேல் வசந்தகுமார் உடல் காங்கிரஸ் தலைமைஅலுவலகமான சத்திய மூர்த்தி பவனில் அஞ்சலிக்காக உடல் வைக்கப்படுகிறது.

மதியம் 2 மணிக்கு மேல் சொந்த ஊரான கன்னியாகுமரி அகஸ்தீஸ்வரத்துக்கு அவரது உடல் கொண்டு செல்லப்படுகிறது. நாளை காலை 10 மணி அளவில் அகஸ்தீஸ்வரத்தில்  வசந்தகுமார் எம்.பி. உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

Post navigation

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று முதல் மீண்டும் இலவச தரிசன டிக்கெட்…
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை! வானிலை மையம் தகவல்

Related Post

தமிழ் நாடு

₹2,109 கோடி பாக்கி… தூய்மைப் பணியாளர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் திணறும் ஒப்பந்ததாரர்கள்!

தமிழ் நாடு வர்த்தக செய்திகள்

60 ஆண்டுகளுக்கும் மேலான சில்லறை வணிக வரலாற்றைக் கொண்ட ‘விவேக்ஸ்’ தனது விற்பனை நிலையங்களை மூடியது

தமிழ் நாடு நெட்டிசன்

மில்லினியல்ஸ், Gen Z-யைத் தொடர்ந்து Gen X-யையும் தொற்றிக் கொண்ட 80’s ஸ்டைல் AI புகைப்படங்கள்… உங்களுக்கான Promptகள் இதோ!

உலகம்

உலகம்

மெக்காவை குறிவைத்து ஹவுத்திகள் தாக்குதல்… சவூதி அரேபியா அறிவிப்பால் உலகளவில் கொந்தளிப்பு… ‘வடிகட்டிய பழைய பொய்’ என ஹவுத்திகள் மறுப்பு

September 16, 2026 Sundar
உலகம் மருத்துவம்

ஆணுறுப்பை பெரிதாக்க சிகிச்சை: தாய்லாந்தில் இங்கிலாந்தைச் சேர்ந்தவர் உயிரிழப்பு

September 9, 2026 Sundar
இந்தியா உலகம்

அருணாச்சலப் பிரதேசம், அக்சாய் சின் : ஐ.நா. வெளியிட்டுள்ள புதிய உலக வரைபடத்தில் இந்திய – சீன எல்லைப் பகுதிக்கு இடைப்பட்ட பகுதியாக சித்தரிப்பு…

September 7, 2026 Sundar
உலகம்

11ம் நாள் காரியத்திற்கு தயாரான நேபாள குடும்பத்திற்கு மூதாட்டி உயிருடன் மீட்பட்டதால் ஆனந்த அதிர்ச்சி…

September 7, 2026 Sundar
உலகம் சிறப்பு கட்டுரைகள்

உலக வரைபடமே மாறுகிறது!

September 5, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer