1980-களின் நினைவுகளைத் தூண்டும் புகைப்படங்கள் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. குறிப்பாக இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட தளங்களில் பலரும் தங்களது தற்போதைய புகைப்படங்களை 80களின் ரெட்ரோ ஸ்டைலில் AI மூலம் மாற்றி பதிவிட்டு வருகின்றனர்.
80களில் இருந்த திரைப்படங்கள், ஆடை அலங்காரம், சிகை அலங்காரம், பழைய தெருக்கள் என அந்த காலகட்டத்தின் தனித்துவமான தோற்றத்தை நினைவுபடுத்தும் வகையில் இந்த AI புகைப்படங்கள் உருவாக்கப்படுகின்றன.
முதலில் மில்லினியல்ஸ் மற்றும் Gen Z தலைமுறையினரிடம் பிரபலமான இந்த டிரெண்ட், தற்போது 80களின் காலத்தை நேரில் அனுபவித்த Gen X தலைமுறையினரிடமும் வேகமாகப் பரவி வருகிறது.

AI மூலம் 80s புகைப்படம் உருவாக்குவது எப்படி?
இதற்கு பெரிய அளவில் புகைப்பட எடிட்டிங் அறிவு தேவையில்லை. முகம் தெளிவாகத் தெரியும் ஒரு புகைப்படத்தை ChatGPT போன்ற AI செயலியில் பதிவேற்றி, அதனை 1980-களின் தோற்றத்தில் மாற்றும்படி Prompt கொடுத்தால் போதும்.
ஆண்களுக்கு கட்டை மீசை, நேர்த்தியாக சீவிய தலைமுடி, அகலமான சட்டை, உயரமான இடுப்புப் பகுதியுடன் கூடிய பேன்ட் என 80களின் ஃபேஷனுக்கு ஏற்ப தோற்றத்தை உருவாக்கலாம்.
அதேபோல் பெண்களுக்கு சுருள் அல்லது அடர்த்தியான தலைமுடி, வண்ணமயமான ஆடைகள், பெரிய காதணிகள் உள்ளிட்ட 80களின் பிரபலமான ஸ்டைல்களைச் சேர்க்கலாம்.
வெறும் தனிப்பட்ட போர்ட்ரெய்ட் மட்டுமின்றி, பழைய குடும்ப புகைப்படம், 80களின் திருமணக் காட்சி, பழைய தமிழ்நாட்டு தெரு, திரைப்பட போஸ்டர் பாணி என நமது கற்பனைக்கு ஏற்ப பல்வேறு விதமான படங்களையும் உருவாக்க முடியும்.
வைரலாகும் 80s புகைப்படங்களை உருவாக்க சில Prompt-கள் இதோ…
1. 80s Glamorous Indian Look
“Transform this photo into a glamorous 1980s Indian film portrait. Preserve the person’s recognisable facial features and natural skin tone. Add voluminous, softly curled hair, a vibrant outfit, statement earrings, warm studio lighting, rich colours and the soft grain of an old film photograph. Keep the result realistic and elegant.”
2. 80s Retro Male Portrait
“Reimagine this photograph as a stylish Indian portrait from the 1980s. Preserve the person’s face and natural skin tone. Add a relaxed tailored shirt, high-waisted trousers, neatly styled hair and a vintage watch. Use warm lighting, slightly faded colours and realistic film grain.”
3. 1980s Tamil Family Photo
“Create a photorealistic 1980s Tamil family photograph. Preserve the identity and facial features of everyone in the uploaded photo. Use authentic 1980s hairstyles and clothing, an old Ambassador car, a traditional Tamil Nadu street with small shops, old bicycles, a cassette player, newspaper and television. Use warm natural lighting, slightly faded colours, realistic 35mm film grain and soft focus. Make it look like an authentic family photograph from the 1980s.”
4. 1980s Kerala Retro Look
“Create a photorealistic 1980s Kerala retro portrait using the uploaded photo as the identity reference. Preserve her face, facial features, skin tone, age and body proportions. Restyle her hair with a natural 1980s hairstyle such as soft curls, feathered layers or side-parted waves. Use stylish 1980s western clothing such as high-waisted jeans, a tucked-in sweatshirt, puff-sleeve top or vintage denim jacket. Add simple retro accessories. Place her in an authentic Kerala setting such as an old tiled-roof house, tea shop, bakery, textile shop street or backwater ferry jetty. Use warm analog film tones, subtle grain, natural skin texture and soft cinematic lighting. Vertical 9:16, photorealistic, cinematic and highly detailed.”
உங்கள் கற்பனைக்கு ஏற்ப Prompt-ஐ மாற்றலாம்!
80களின் பள்ளி மாணவர் தோற்றம், கல்லூரி மாணவர் தோற்றம், திருமண புகைப்படம், நண்பர்களுடன் எடுத்த புகைப்படம், பழைய சினிமா ஹீரோ அல்லது ஹீரோயின் பாணி என உங்களுக்குப் பிடித்த வகையில் Prompt-ல் கூடுதல் விவரங்களைச் சேர்க்கலாம்.
உதாரணமாக, “1985-ம் ஆண்டு சென்னை மவுண்ட் ரோட்டில் நிற்கும் குடும்பம், பின்னணியில் பழைய Ambassador கார், அருகில் சைக்கிளில் செல்லும் ஒருவர், பழைய கடைகள், Kodak film camera-வில் எடுத்த புகைப்படம் போன்ற தோற்றம்” என்று குறிப்பிட்டால், AI அதற்கேற்ப காட்சியை உருவாக்கும்.
சமூக வலைதளங்களில் பகிரும் முன் கவனம்!
AI மூலம் உருவாக்கப்படும் புகைப்படங்களில் சில நேரங்களில் முக அமைப்பு, விரல்கள், நகைகள், ஆடைகள் அல்லது பின்னணியில் இருக்கும் எழுத்துகள் மாறுபடலாம். எனவே, புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிடுவதற்கு முன்பு ஒருமுறை நன்றாகச் சரிபார்ப்பது அவசியம்.
மேலும், தனிப்பட்ட புகைப்படங்களை AI செயலிகளில் பதிவேற்றும்போது கவனமாக இருக்க வேண்டும். முக்கியமான ஆவணங்கள், தனிப்பட்ட அல்லது அந்தரங்கமான காட்சிகள் மற்றும் சம்பந்தப்பட்டவர்களின் அனுமதியின்றி அவர்களது புகைப்படங்களை பதிவேற்றுவதைத் தவிர்ப்பது நல்லது.
80களின் நினைவுகளை AI மூலம் மீண்டும் உருவாக்கி, உங்கள் சமூக வலைதளப் பக்கங்களை ரெட்ரோ ஸ்டைலில் கலக்குங்கள்!