கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் ’இ-பாஸ்’ முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மாவட்டங்களிடையே செல்ல ஈ.பாஸ் கட்டாயமாக்கப்பட்ட நிலையில், கடந்த 17 ஆம் தேதி முதல் இ.-பாஸ் விதிகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.

இதனால் அன்று முதல் தினமும், சுமார் 30 ஆயிரம் முதல் 35 ஆயிரம் பேர் வரை சென்னைக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

‘’ ஈ- பாஸ் தளர்வு அறிவிக்கப்பட்ட பின்னர் இதுவரை வெளியூர்களில் இருந்து சென்னைக்கு மூன்று லட்சத்து 25 ஆயிரம் பேர் வந்துள்ளனர்’’ என சென்னை மாநகராட்சி ஆணையாளர் ஜி.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

’’கொரோனா பாதித்தவர்கள் குறித்து அதிகாரிகளுக்கு. தகவல் தெரிவிப்போருக்கு 15 ஆயிரம் ரூபாய் வெகுமதி அளிக்கப்படுவதாக சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரவுகின்றன.இப்படி வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று ஆணையாளர் எச்சரித்தார்.

-பா.பாரதி.