பிப்ரவரி 15ந்தேதி முதல் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனத்துக்கு அனுமதி?

Must read

திருமலை: பிப்ரவரி  15ம் தேதிக்கு பிறகு  திருப்பதி ஏழுமலையான பக்தர்கள் இலவசமாக தரிசிக்க அனுமதி வழங்கப்படுவது குறித்து தேவஸ்தானம் ஆலோசித்து வருகிறது என அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று பரவல் காரணமாக, திருப்பதி ஏழுமலையான் கோவிலில், ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட்டவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. தினசரி 10 ஆயிரம் டிக்கெட்டுகள் இலவச தரிசனத்துக்காக வழங்கப்பட்டு வருகிறது. தற்போது கொரோனா தொற்று சற்று கட்டுக்குள் வந்துள்ளதால், மீண்டும் பொதுமக்களுக்கு இலவச தரிசனத்தை வழங்க தேவஸ்தான் முடிவு செய்துள்ளது.

அதன்படி பிப்ரவரி 15ஆம் தேதி அல்லது அதற்கு பிறகு இலவச நேரடி தரிசனத்தில் பக்தர்களை அனுமதிக்க திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதை தேவசம் போர்டு தலைவர் சுப்பாரெட்டி உறுதி செய்துள்ளார்.

இதற்கிடையில் பிப்ரவரி மாதம் இலவச தரிசனத்துக்கான ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு நேற்று தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

More articles

Latest article