டெல்லி: நாடாளுமன்ற நிகழ்வுகள் – உறுப்பினர்களின் செயல்பாடுகள் குறித்து அனைவரும் நேரடியாக அறிந்துகொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள  ‘ டிஜிட்டல் சன்சாட் ஆப்’-ஐ சபாநாயகர் தொடங்கி வைத்தார். தொடர்ந்து நாடாளுமன்ற வளாகத்தையும் ஆய்வு செய்தார்.

இந்த செயலி மூலம், பாராளுமன்ற பட்ஜெட் தாக்கள் உள்பட அங்கு நடைபெறும் நிகழ்வுகள், விவாதங்கள், அமளிகள் போன்றவற்றை பொதுமக்கள்  மொபைலில் நேரலையாக பார்க்க முடியும்.

நாடாளுமன்றத்தின் நடப்பாடின் முதல் கூட்டத் தொடரும், பட்ஜெட் கூட்டத் தொடாரும் வரும் 31ந்தேதி  குடியரசுத் தலைவா்  தொடங்க உள்ளது. பிப்ரவரி 1ந்தேதி மத்திய பொது நிதிநிலை அறிக்கை (பட்ஜெட் 2022-23) தாக்கல் செய்யப்பட உள்ளது. இதையொட்டி,  மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா, நேற்று (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்ற வளாகத்தில் மமைய அரங்கு மற்றும் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மற்ற ஏற்பாடுகள் குறித்து அவா் ஆய்வு மேற்கொண்டாா்.

அதைத்தொடர்ந்து, நாடாளுமன்ற அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியவர்,  வருகின்ற நாடாளுமன்ற அமா்வின் போது உறுப்பினா்கள், அதிகாரிகள், ஊடகங்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில்  தேவையான கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடிக்கும்படி அறிவுறுத்தியதுடன், நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வசதிகளை மேம்படுத்துவதையும் உறுதி செய்யவும் உத்தரவிட்டதுடன், பஉறுப்பினா்களுக்கு போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அதிகாரிகளுக்கு அவா் உத்தரவிட்டாா்.

முன்னதாக வியாழக்கிழமை (27ந்தேதி), நாடாளுமன்ற செயல்பாடுகளை பொதுமக்கள் நேரடியாக கண்டறியும் வகையில், ‘டிஜிட்டல் சன்சாட் செயலி’ தொடங்கி வைக்கப்பட்டது. மக்களவையின் டிஜிட்டல் தடத்தை மேம்படுத்துவதற்கும், மக்களை நாடாளுமன்றத்துடன் இணைக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, ‘டிஜிட்டல் சன்சாத் செயலி’ தொடங்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுஉள்ளது.

இந்தச் செயலி மூலம் அனைத்து நாடாளுமன்ற நடவடிக்கைகள், நேரடி ஓளிபரப்பு மற்றும் பிற செயல்பாடுகள் குறித்து தெரிந்து கொள்ள வகை செய்யப்பட்டுள்ளது. மேலும் 1947- ஆம் ஆண்டு முதல் நாடாளுமன்ற உறுப்பினா்கள், அமா்வுகளில் பங்கேற்றுப் பேசிய உரைகள், 12-ஆவது மக்களவையில் இருந்து 17-ஆவது மக்களவை வரையிலான சபை நடவடிக்கைகள் பற்றிய பொதுவான தகவல்களைப் பொதுமக்கள் அறிந்து கொள்வதற்கும் இந்தச் செயலி மூலம் வசதி செய்யப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவதையும் இந்த செயலி மூலம் நேரடியாகப் பாா்க்கலாம் எனவும் மக்களவை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் சன்சாட் ஆப்’ ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் ஸ்டோ,  ‘கூகுள் பிளே ஸ்டோா்’-இல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நாடாளுமன்ற பட்ஜெட் டிஜிட்டல் முறையில் தாக்கல் செய்யப்படுவதால், பொதுமக்கள் பட்ஜெட் கூறித்து, மொபைன் போன் மூலம் தெரிந்து கொள்ளும் வகையில் இந்த செயலி உருவாக்கப்பட்டு உள்ளது.

‘டிஜிட்டல் பார்லிமென்ட்’ செயலியில் பார்லிமென்டின் இரு அவைகளின் நடவடிக்கைகள், அவைகளின் அன்றாட அலுவல்கள் பற்றிய தகவல்கள், அவையின் தரையில் வைக்கப்படும் கடிதத்துடன் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என்று பிர்லா கூறினார்.

இது இருமொழி பயன்பாடாகும் (ஆங்கிலம் மற்றும் இந்தி) மற்றும் Android மற்றும் iOS இயங்குதளங்களில் கிடைக்கிறது. இந்த செயலியை யூனியன் பட்ஜெட் இணையதளத்தில் (www.indiabudget.gov.in) பதிவிறக்கம் செய்யலாம்.