விவசாயிகளுக்கு லாபம் அளிக்கும் என்பதால் ‘வைன்’ சூப்பர் மார்க்கெட்டுகளில் விற்பனை! சிவசேனா எம்.பி. விளக்கம்.

Must read

மும்பை: வைன் என்பது மது கிடையாது. வைன் விற்பனை அதிகரித்தால், அது விவசாயிகளுக்கு தான் பலனளிக்கும் என சிவசேனா கட்சியைச் சேர்ந்த சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

குடி குடியை கெடுக்கும் என்பது பழமொழி. அதுபோல அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதும் பழனிமொழி. ஆனால், நமது அரசியல் கட்சியினர் இவற்றை கண்டுகொள்ளாமல் வருமானத்தை பெருக்கும் நோக்கில் மதுபானங்களை தாராளமான விற்பனை செய்து வருகின்றன. மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆட்சி சிவசேனா அரசு, வைன் மதுபானங்களை சூப்பர் மார்க்கெட்டுகளில் விற்பனை செய்ய அனுமதி வழங்கி உள்ளது. அதற்கான  புதிய சட்டத்தை அம்மாநில அரசு கொண்டுவந்துள்ளது.

அதன்படி, 1,000 சதுர அடிக்கும் மேல் பரப்பளவு கொண்ட சூப்பர் மார்க்கெட்களில் வைன் விற்பனை செய்யலாம். வருடத்திற்கு 5,000 ரூபாய் கட்டணம் செலுத்தி இதற்கான உரிமம் பெற்றுக்கொள்ளலாம். இங்கு வைன் மட்டுமே விற்பனை செய்யப்படும், பிற மது வகைகளோ, பீர் வகைகளோ இங்கு விற்பனை செய்யக்கூடாது.

பள்ளிகள், வழிபாட்டு தலங்கள் அருகாமையில் இருக்கக் கூடிய சூப்பர் மார்க்கெட்களில் வைன் விற்பனை செய்ய உரிமம் கிடையாது, என்று கூறியதுடன் சூப்பர் மார்க்கெட்டுகளில் விற்பனை செய்யப்படும்   வைன் வகைகளில் ஆல்கஹாலின் அளவு மிகவும் குறைவாகவே இருக்கும் என்றும் கூறியுள்ளது.

மாநில அரசின் இந்த நடவடிக்கைக்கு சிலர் ஆதரவு தெரிவித்தாலும்  காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் மட்டுமின்றி பாஜகவும் ள் கடுமையாக கண்டித்து உள்ளன.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத், வைன் மதுபானம் சூப்பர் மார்க்கெட்களில் வைன் விற்பனை செய்யப்படுவது மூலம் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்க உதவும் என்று அதிரடியா ககூறியுள்ளார். மேலும்,  வைன் என்பது மது கிடையாது என்றும் கூறியுள்ளார்.

நாட்டின் மொத்த வைன் உற்பததியில் மகராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் மூன்றில் இரண்டு பங்கு வைன் தயாரிக்கப்படும். அங்கு  40க்கும் மேற்பட்ட வைன் தொழிற்சாலைகள் உள்ளன.  நாட்டின் வைன் உற்பத்தியில் நாசிக்கின் பங்கு மட்டும் 80% ஆக உள்ளது. 1,000 கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தகத்தை கொடுப்பதாகவும் கூறப்படுகிறது.

வைன் சாப்பிடுவது உடலுக்கு நல்லதா? மருத்துவ ஆய்வுகள் என்ன கூறுகின்றன?

எந்த வொரு பானமானாலும் அளவோடு குடிப்பது உடலுக்கு நன்மை. அதுபோல,  அளவோடு  ரெட் ஒயின் குடிப்பது இதயம், பற்களுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும் என றிப்பிட்ட கால இடைவெளியில் வயதிற்கு தகுந்த அளவில், ரெட் ஒயினை ஓவ்வொருவரும் அருந்தலாம் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

ரெட் ஒயினில் உள்ள பொலிபீனோல்ஸ் நோய்த்தொற்றை ஏற்படுத்தும் பாக்டீரியாவை அழிக்கிறது என மாட்ரிட்டில் ஸ்பானிஷ் தேசிய ஆராய்ச்சிக் கழகம் நடத்திய மருத்துவ ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

ரெட் ஒயினில் இருக்கும் ஃபீனைல்கள் எனப்படும் வேதி பொருட்கள், பற்சிதைவு மற்றும் பல் ஈறுகளில் ஏற்படக்கூடிய தொற்றுக்கள் போன்றவற்றை தடுக்கக்கூடிய திறன் கொண்டது என கண்டறியப்பட்டுள்ளது.

சோதனையில் ரெட் ஒயினில் உள்ள பாலிஃபினால்களின் செயல்திறன் 47 மணி நேரம் வரை நீடித்தது.  இதனால், நோய் எதிர்ப்பு திறன் ரெட் ஒயினில் அதிகம் இருக்கிறது என கண்டறிந்துள்ளனர் ஆய்வாளர்கள். எனவே ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் வயதிற்கு தகுந்த அளவில், ரெட் ஒயினை ஓவ்வொருவரும் அருந்தலாம் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

முன்னதாக கலிஃபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் ரெஸ்வெரட்ரோல் எனும் ஆன்டிஆக்ஸிடன்ட் ரெட் ஒயினில் உள்ளதால் பருக்களை உண்டாக்கும் பாக்டீரியாவை கொல்லும் திறன் உண்டு என கண்டுபிடிக்கப்பட்டது.  இதனால் ஒயின் குடிப்பதால் தோல் மிகவும் பொலிவுடன் காணப்படும் என மருத்துவர்களும் தெரிவிக்கின்றனர். நாம் தினமும் முறையான உடற்பயிற்சி, டயட் உடன், மிகக் குறைந்த அளவு ரெட் ஒயின் குடிப்பதால் இதயம் சம்பந்தபட்ட நோய்கள் ஏற்படாது எனவும், சர்க்கரை நோய் வருவதற்கு வாய்ப்பே இல்லை எனவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

More articles

Latest article