கர்நாடக மாநில பாஜக தலைவராக முன்னாள் முதலமைச்சர் பி.எஸ். எடியூரப்பாவின் மகன் பி.ஒய். விஜயேந்திரா நியமிக்கப்பட்டுள்ளார்.

சட்டசபை தேர்தல் தோல்விக்கு காரணமான நளீன் குமார் கட்டீல் ராஜினாமா செய்ததையடுத்து, பாஜக மாநில தலைவர் பதவி காலியானது.

மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே, சி.டி. ரவி உள்ளிட்டோரின் பெயர்கள் மாநில தலைவர் பதவிக்கு அடிபட்ட நிலையில் விஜேந்திராவை மாநில தலைவராக நியமித்துள்ளார் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா.

நாடாளுமன்ற தேர்தல் விரைவில் வர உள்ள நிலையில் லிங்காயத் சமுதாயத்தினரின் வாக்குகளை குறிவைத்து பாஜக இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகக் கருத்து கூறப்படுகிறது.