சென்னை:

தனது பெயரில் போலி டுவிட்டர் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் போலீசில் புகார் அளித்துள்ளார்.

ஸ்டாலின் சார்பில் சென்னை மாநகர காவல் ஆணையரிடம் ஆர்.எஸ். பாரதி, என்.ஆர். இளங்கோ ஆகியோர் இது குறித்து புகார் மனுவை அளித்தனர். அதில், ‘‘தமிழ் சமூகத்தில் பிரிவினையை உண்டாக்கும் வகையில் சமூக வலை தளங்களில் பதிவுகளை வெளியிடுகின்றனர்.

திமுக மீதும், என் மீதும் களங்கத்தை ஏற்படுத்தும் வகையிலும், அரசியல் காழ்ப்புணர்ச்சியோடும் சிலர் தவறான, நான் கூறாத கருத்தக்களை போலி கணக்குகள் மூலம் அதில் பதிவிடுகின்றனர்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கோவிலுக்கு செல்வோர் திமுக.வுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று டுவிட்டரில் ஸ்டாலின் புகைப்படத்துடன் கருத்து பதிவானது. இது சமூக வலை தளங்களில் வைரலானது. இந்த பதிவை தான் போலி கணக்கு மூலம் பதிவிட்டதாக ஸ்டாலின் குறிப்பிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.