அபுதாபி:

விமான பயணிகள் பக்கத்து இருக்கையையும் சேர்த்து புக்கிங் செய்யும் திட்டத்தை எதியாத் ஏர்வேஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

விமானம், பஸ், ரெயில் பயணங்களின் போது பக்கத்து இருக்கையில் அமரும் நபரால் நன்மையை விட தொந்தரவே அதிகம் இருப்பதை பலரும் அனுபவித்து இருப்பீர்கள். இதற்கு முடிவு கட்டும் விதமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸை சேர்ந்த எதியாத் ஏர்லைன்ஸ் நிறுவனம் புதிய திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

அதில் விமான டிக்கெட் புக்கிங் செய்தவுடன் போது பக்கத்து இருக்கையையும் சேர்த்து சலுகை கட்டணத்தில் புக்கிங் செய்யும் வகையில் ஏலம் விடப்படும். விமானம் புறப்படும் 30 மணி நேரத்திற்கு முன்னதாக இந்த ஆஃபர் வெளியிடப்படும். இது இருக்கை காலியாக இருக்கும் பட்சத்திலும், கேபின் வடிவமைப்புக்கு ஏற்பவும் இருக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜூலை 3ம் தேதி முதல் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்படுகிறது.

இதன் மூலம் அதிக இடவசதியையும், தனிமைன சூழ்நிலையையும் ஏற்க தகுந்த கட்டணத்தில் பெற முடியும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த திட்டம் நிறுவனத்தின் வருமானத்தை பெருக்கும் வகையிலான அறிவிப்பு என்பதை வெளியிடவில்லை.

கடைசி நேரம் வரை காலியாக இருக்கும் இருக்கைகளை இதுபோல் விற்று காசாக்கும் திட்டமாக இது இரு க்கலாம் அல்லது சில பயணிகள் பக்கத்து இருக்கையையும் சேர்த்து பெற விருப்பம் அளித்திருக்கலாம் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளது.