நேற்று முன்தினம் வெளியாகி இருக்கும் ஒரு வீடியோ, மேற்கத்திய நாடுகளை கலங்கடித்துக்கொண்டிருக்கிறது.

உலகை அதிரவைத்த மரணங்களில் ஒன்று இங்கிலாந்து இளவரசி டயானாவின் மரணம்.  1997ம் ஆண்டு ஆகஸ்ட் 31ம் தேதி.. பிரான்ஸ் தலைநகர் பாரீஸில்   தன ஆண் நண்பருடன் டயானா பயணித்த கார் விபத்துக்குல்ளாக.. டயானா மரணமடைந்தார்.

அப்போதிலிருந்தே, “அது விபத்தல்ல.. டயானாவை கொல்ல திட்டமிட்டு செய்யப்பட்ட சதி” என்று பலரும் நினைத்து வருகிறார்கள்.

இந்த நிலையில், பிரிட்டன் உளவு நிறுவனமான எம்.ஐ. 5  அமைப்பில் பணி புரிந்து ஓய்வு பெற்ற ஹாப்கின்ஸ் என்பவர்   “இங்கிலாந்து இளவரசி டயானாவை கொன்றது நான்தான்” என்று பகிரங்கமாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.

ஹாப்கின்ஸ் பேசும் வீடியோ  காட்சிதான் இப்போது  மேற்கத்திய நாடுகளை கலங்கடித்துக்கொண்டிருக்கிறது.

அவர் அளித்திருக்கும் அதிரடி வாக்குமூலம் இதுதான்:

“என் பெயர் ஹாப்கின்ஸ். வயது  80. இங்கே லண்டன் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தேன். “நீ இருக்கப்போவது இன்னும் சில நாட்கள் மட்டும்தான். அதை நிம்மதியாக உறவினர்கள், நண்பர்களோடு கழித்துவிடு” என்று சொல்லி நேற்று என்னை டிஸ்சார்ஜ் செய்து அனுப்பி விட்டார்கள்.

என் வாழ்க்கை முடிவுக்கு வருவதை நான் நன்கு உணர்ந்துவிட்டேன். இந்த நேரத்தில் என் மனதை நெடுநாளாய் அழுத்திக்கொண்டிருக்கும் சில ரகசியங்களை வெளியே சொல்ல வேண்டும் என்று தோன்றுகிறது.

எம்.ஐ. 5 என்று சுருக்கமாகச் சொல்லப்படும் பிரிட்டிஷ் மிலிட்டரி இன்டலிஜென்ஸ் பீரோவில் ஒற்றனாக 38 ஆண்டுகள் பணிபுரிந்தேன்.

உலகம் முழுதும்  உளவு பார்ப்பதுதான் எம்.ஐ. 5 அமைப்பின் அடிப்படை வேலை. ஒற்றர்கள் ஒவ்வொருவருக்கும் பல துறைகளில் பயிற்சி அளிப்பார்கள். எனக்கு மெக்கானிக்கல் இன்ஜினியராகவும் ஆயுத  நிபுணராகவும் பயிற்சி அளித்தார்கள். என்னால் எந்த ஆயுதத்தையும் எந்திரத்தையும் எளிதில் கையாள முடியும்.

ஆனால் என்னை ஒரு கொலைகாரனாக எம்.ஐ.5 அமைப்பு பயன்படுத்திக்கொண்டது. அசாசின் கில்லர் என்பதைவிட  ஹிட்மேன் என்று என்னைச் சொல்லலாம்.

டயானா

வழக்கமான முறையில் சுட்டுக்கொல்வது, குண்டுவைப்பதை எல்லாம் நான் விரும்பியதே இல்லை. ரசாயனங்கள், எந்த சோதனைகளிலும் கண்டுபிடிக்க முடியாத விஷம் போன்றவற்றின் மூலம் கொலை செய்ய எனக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

கொலையை விபத்து போல செட் அப் செய்வதிலும் நான் கைதேர்ந்தவன்.  என்னைப்போல எம்.ஐ. 5 அமைப்பில் அப்போது ஏழு ஹிட்மேன் ஒற்றர்கள் இருந்தோம். யுனைட்டட் கிங்டம் (இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, அயர்லாந்து) முழுவதிலும் நாங்கள் பலவித காரியங்களை செய்திருக்கிறோம்.

அப்போது எம்.ஐ.5 என்ன செய்கிறது என்று யாரும் கவனிக்க மாட்டார்கள். அப்படி கவனிக்கவும் அரசு அனுமதிக்காது.

தேசத்தின் பாதுகாப்புக்கு ஆபத்தானவர்கள் என்று யாரையெல்லாம் எம்ஐ5 சந்தேகிக்கிறதோ அந்த நபர்களின் பட்டியல் தயார் செய்யப்டும். அதிலிருந்து  எங்களுக்கு பெயர்களை பிரித்து அளிப்பார்கள்.

அந்த பட்டியில்ல இடம் பிடிப்பவர்கள் பெரும்பாலும் அரசியல்வாதிகள், போராட்டக்காரர்கள், ஊடகவியலாளர்கள்,  தொழிற்சங்க பிரமுகர்கள்தான்.

இப்படிப்பட்டவர்களில் 23 பேரை,   1973ம் வருடம் துவங்கி 1999 டிசம்பர் வரையிலான   காலகட்டத்தில் கொன்றிருக்கிறோம். .

நான் கொலை செய்தவர்களில் முக்கியமான புள்ளி,  இளவரசி டயானா. நான் கொலை செய்த ஒரே பெண்மணி அவர்தான். அரச குடும்பத்தைச் சேர்ந்த நபரும் அவர் மட்டும்தான்.  அதுமட்டுமல்ல. அரச குடும்பத்தாரலேயே கொலை செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்ட ஒரே நபரும் டயானாதான்.

உலகமே நேசித்த அந்த இளவரசியை கொலை செய்ய வேண்டும் என எனக்கு உத்தரவிடப்பட்டபோது நான் அதிர்ந்துபோனேன். என்னால் சட்டென எந்தவொரு முடிவுக்கும் வரமுடியவலில்லை.

விபத்து…

டயானாவுககு இயற்கை வஞ்சகம் இல்லாமல் அழகை வாரிக்கொடுத்திருந்தது. அவர் ஓர் அழகுபெட்டகம். அது மட்டுமல்ல… ஓர் இரக்கம் மிகுந்த பெண்மணி. அனைவருக்கும் ஏதேனும் நல்லது செய்ய விரும்பிய இளம்பெண்.

அந்த பேரழகியின் வாழ்க்கையை சட்டென ஒரு மரக்கிளையை போல முறித்துப்போட என்  மனம் இடம் கொடுக்கவில்லை.

நான் தடுமாறுவதைக் கண்ட மேலதிகாரிகள், டயானா ஏன் கொல்லப்பட வேண்டும் என்று காரணங்களை அடுக்கினார்கள்.

நடுத்தர குடும்பப் பின்னணியில் பிறந்த டயானா, நாட்டை ஆளும் பக்கிங்ஹாம் அரண்மணைக்கு மருமகளாக வந்தார். ஆனால் அங்கு (அரச குடும்பத்தில்) நடப்பது எதுவும் அவருக்கு சற்றும் உடன்பாடானதாக இல்லை. தன்னை ஒரு காட்சி பொருளாக மட்டுமே அரண்மனை ஆட்கள்  கையாள விரும்புகிறார்கள் என்பதை அவர் எளிதில் புரிந்துகொண்டார்.

ஆகவே அரச குடும்பத்தினர் அத்தனை பேர் மீதும் டயானாவுக்கு கடும் ஆத்திரம் இருந்தது.

அரண்மனை ரகசியங்கள் அனைத்தும் அவருக்கு தெரிந்திருந்தன. சரியானதொரு நேரத்தில் அந்த ரகசியங்கள் எல்லாவற்றையும்  அம்பலப்படுத்த  அவர்  காத்துக்கொண்டிருந்தார்.

அப்டியான ஒரு சூழல் விரைவிலேயே வந்துவிடும் என்று தெரிந்தது. அப்படி அரண்மனை ரகசியங்கள் அம்பலமானால், யுனைட்டட் கிங்டம் மட்டுமல்ல.. உலகம் முழுதும் மிகப்பெரிய கொந்தளிப்பான சூழல் ஏற்படும்.

அதுமட்டுமல்ல.. ஆயிரம் ஆண்டுகள் தாண்டிய அரசவம்சம்  முடிவுக்கு வந்துவிடும். ஆகவே அதற்கு முன் இளவரசியை கொன்றுவிட வேண்டும் என்று  என் பாஸ் என்னிடம் தெரிவித்தார்.

அது மட்டுமல்ல.. எலிசபெத் மகாராணியின் கணவர், பிரின்ஸ் பிலிப் தன்னை அழைத்து  நேரிலேயே இந்த உத்தரவை பிறப்பித்ததாக  எனது பாஸ் கூறினார்.

டயானா கொலையை ஒரு விபத்து போல சித்தரிக்க வேண்டும் என்றும் பாஸ் என்னிடம் தெரிவித்தார்.  அதற்கு முன்பாக நான் எந்தவொரு பெண்ணையும் கொன்றது கிடையாது. இதுவும் என் மனதை உறுத்தியது.

ஆனால் எனக்கு வேறு வழி இருக்கவில்லை. எங்கள் மகாராணிக்காவும் என்  நாட்டுக்காகவும்  அரச கட்டளைக்கு கீழ்ப்படிய வேண்டி இருந்தது.

டயானாவை கொல்ல ஒப்புக்கொள்வதாக என் பாஸிடம் தெரிவித்தேன்.

டயானா, உலகம் முழுதும் அறியப்பட்ட பெண்மணி. அவர் கொல்லப்பட்டால் அது உலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

சிதைந்த கார்

ஒரு கொலையை வெறும் விபத்தாக சித்தரிப்பதும் அப்படியே மக்களை  நம்ப வைப்பதும்  எளிதான செயல் அல்ல. அதற்கு நிறைய நிறைய திட்டமிடல் அவசியம். ஏதேனும் ஓரிடத்தில் சறுக்கினாலும் மொத்த சாயமும் வெளுத்துவிடும்.

எனவே டயானாவை கொல்லும் சதித் தி்ட்டம் குறத்து ஆழமாக சிந்தித்தோம். மிகுந்த திட்டமிட்டலோடு அதற்கான செயல்திட்டத்தை உருவாக்கினோம். மிகத் துல்லியமாக செயல்பட்டு அதைக் கச்சிதமாக செய்து முடித்தோம்.

இது போல கொலையை விபத்தாக சித்தரிக்கும் போது மிகப்பெரிய தலைவலியாக இருப்பது ஊடகங்கள்தான். சாதாரண விபத்தையே கொலையை சித்தரிப்பவர்கள் அவர்கள். அப்படிப்பட்டவர்கள், டயானா என்கிற உலகப்புகழ் பெற்ற பெண்மணியின் மரணத்தை அத்தனை எளிதில் விட்டுவிடுவார்களா…  புலனாய்வு செய்கிறேன் என்று ஆளாளுக்கு இறங்குவார்கள்.

ஆகவே தீர்க்கமாக சிந்தித்து அதற்கு ஒரு திட்டத்தை உருவாக்கினோம்.

பிரிட்டனில் உள்ள எல்லா ஊடக நிறுவனங்களும் பக்கிங்ஹாம்   அரண்மணையில் உள்ள எவரையாவது தங்களுக்கு தகவல் தரும் சோர்ஸாக வைத்திருக்கும். இந்த சோர்ஸ் ஒவ்வொருத்தரும்  சம்பந்தப்பட்ட ஊடக நிறுவனத்தின் ஏதோ ஒரு ஊடகவியலாளருடன்தான் தொடர்பில் இருப்பார். ஆகவே அந்த சோர்ஸ்கள் மூலம் ஊடகவியலாளறுக்கு துண்டு துண்டாக தகவல் பரப்பினோம். அந்த ஊடகவியலாளர், உடனே தனது நிறுவனத்தின் ஆசிரியரிடம் இதை சொல்வார். அந்த ஆசிரியரோ, இது அரண்மணை ரகசியம் என்பதால் வெளியிடலமா, தவிர்த்துவிடலாமா முதலாளியிடம் ஆலோசனை கேட்பார்.

எந்த ஒரு ஊடக முதலாளிக்கு, “ பக்கிங்ஹாம் அரண்மனையில் இருக்கும் ஆட்களைப் பிடித்து நைட்ஹூட் (ராஜ பட்டம்) வாங்கிவிட வேண்டும்” என்ற ஆசை இருக்கும்.

அவர், “குறிப்பிட்ட இந்தத் தகவல் மக்களை சேர வேண்டும் என்று  அரண்மனையே விரும்புகிறது. அதை நிறைவேற்றுவோம்” என்று நினைப்பார்.

அதோடு, தனது ஊழியரிடம், “அரண்மனை குறித்த அந்த செய்தியை  நமக்கு எதிரி  ஊடகத்துடன்  கிராஸ் செக் செய்துவிட்டு வெளியிடுங்கள்” என்று ஆலோசனை சொல்வார்.

அப்படி எதிர் ஊடகத்துடன் கிராஸ் செக் செய்வார் ஆசிரியர். அங்கும் நாங்கள் அதே குறிப்பிட்ட தகவலை சென்றடைய செய்திருப்போம். ஆக அவரும் “அட..ஆமாம்” என்பார்.

ஹாப்கின்ஸ்

ஆகவே அடுத்த ஊடகத்துக்கு முன்பாகவே நாம் செய்தியை வெளியிட வேண்டும் என்று குறிப்பிட்ட செய்தியை வெளியிடுவார்கள்.

பிரிட்டனில் எந்த ஊடகமும் சுதந்திரமாக செயல்படவில்லை என்பதால்,  எங்களது வேலை எளிதாக முடிந்தது.

தற்போது இந்த உண்மைகளை எல்லாம் நான் வெளியிடுவதால் கைது செய்யப்படலாம். அரசு ரகசியங்களை வெளியிட்டதாக என் மீது குற்றம் சுமத்தப்படலாம்.

ஆனால்…  உலகத்தைவிட்டுப் போகத் தயாராகிவிட்டவன், சிறைக்குச் செல்லவா அஞ்சப்போகிறேன்?

ஒருவேளை டயானா மரணம் குறித்து நான் தெரிவித்த உண்மைகளை புலன் விசாரணை நடத்த முன்வந்தாலும், அது சாதாரணமாக முடியாது. இது சிக்கலான விவகாரமாகவே இருக்கும். ஏனென்றால் எம்.ஐ. 5 உளவு நிறுவனம் மிக தந்திரமான அமைப்பாகும்.  தனது நடவடிக்கைகள் எதற்கும்  எந்த ஒரு தடயமும் இல்லாமல் பார்த்துக்கொள்வதில் கில்லாடி. அங்கே எதுவுமே எழுத்துப்பூர்வமாக கோப்புகளில் இருககாது.

தவிர, டயானா கொலையில் என்னோடு சம்பந்தப்பட்ட சக ஒற்றர்கள்   ஏற்கெனவே இறந்துவிட்டார்கள். அல்லது வயது முதிர்வால் கோமாவில் வீழ்ந்துகிடப்பார்கள்.

ஒருவேளை.. இதையெல்லாம் கடந்து, ஆதாரங்கள்கிடைத்து, சதி நிரூபணம் ஆகிறது என்றே வைத்துக்கொள்வோம். சதியை உருவாக்கிய – டயானாவை கொல்ல உத்தரவிட்ட – பிரின்ஸ் பிலிப் மேல் நடவடிக்கை எடுக்க முடியுமா?

மகாராணியின் கணவரை சட்டத்தின் கரங்கள்  நீளுமா?” –  இப்படி முடிகிறது ஹாப்கின்ஸ் பேசும் வீடியோ.

இந்த வீடியோவை வெளியிட்டிருப்பது கேரி லாராபீ என்பவர் நடத்தும் யூ டியூப் சேனல்.

இந்த யூடியூப் சேனலின் முக்கிய பணி,  ஆதாரம் இல்லை என்று  வெகுஜன ஊடகம் நிராகரிக்கும் செய்திகளை தன் சேனலில் தொடர்ந்து வெளியிடுவதுதான். “ஆதாரம் கிடைக்கவில்லை என்பதால் அங்கு குற்றமே நிகழவில்லை என்று அர்த்தமா” என்று கேள்வி எழுப்புபவர் இந்த யூ டியூப் சேனலின் அதிபர் கேரி லாராபீ.

ஹாப்கின்ஸ் கூறியதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறதோ தெரியவில்லை.