டெல்லி: இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள் என டெல்லியில் உள்ள உக்ரைன், ரஷ்ய நாட்டு தூதர்களை நேரில் வரவழைத்து  இந்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
உக்ரைன் ரஷியா இடையேயான போர் இன்று 6வது நாளாக தொடர்ந்து வருகிறது. உக்ரைன் தலைநகர் கீவ்வின் மீது ரஷிய படைகள் எந்நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம் என்பதால் இந்தியர்கள் அந்த நகரத்தை விட்டு உடனடியாக வெளியேறுமாறு இந்திய தூதரகம் அறிவுறுத்தி உள்ளது. உக்ரைனுக்கு எதிரான படையெடுப்பில் இருந்து ரஷியா அணு ஆயுதங்களை பயன்படுத்து குறித்து ஆலோசித்து வருகிறது. உக்ரைனின்  படைகள் குவிக்கப்பட்டு வருவதுடன், உக்ரைன் எல்லைகளை முற்றுகையிடுதல் போன்ற செயல்களில் ரஷியா இறங்கி உள்ளது.
இந்த சூழலில் உக்ரைன் தலைநகர் கீவ் நகர் அருகே ரஷிய ராணுவ படைகள் நெருங்கி உள்ளன. இந்த படைகள் வரிசையாக 40 மைல்கள் தொலைவுக்கு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. தற்போது கெர்சன் நகரை ரஷியா ராணுவம் தாக்கத் தொடங்கியுள்ளது. போர் தீவிரமடைந்திருக்கும் இந்த சூழலில் அங்கு சிக்கி தவிக்கும் இந்திய மக்கள் மற்றும் மாணவர்களை மீட்பதற்காக மத்திய அரசு பல்வேறு தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது.
அந்த வகையில் ஆபரேசன் கங்கா மூலம் உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க நான்கு மத்திய அமைச்சர்கள் உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். இந்த நிலையில் உக்ரைன் தலைநகர் கீவ்வின் மீது ரஷிய படைகள் எந்நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம் என்பதால் இந்தியர்கள் அந்த நகரத்தை விட்டு உடனடியாக வெளியேறுமாறு இந்திய தூதரகம் அறிவுறுத்தி உள்ளது.
இந்த பரபரப்பான சூழலில், கர்நாடகத்தை சேர்ந்த மாணவர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் இந்தியர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையடுத்து  உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்கள் மற்றும் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள் என டெல்லியில் உள்ள உக்ரைன் மற்றும் ரஷ்ய நாட்டு தூதர்களை நேரில் வரவழைத்து அறிவுறுத்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்