பிக் பாஸ் 5 : வீட்டை விட்டு வெளியே செல்வது யார்? விடை இன்றே கிடைத்துவிடும்….!

Must read

பிக் பாஸ் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை மிக பிரம்மாண்டமாக தொடங்கியது. விஜய் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10:00 மணிக்கும் சனி மற்றும் ஞாயிறுகளில் இரவு 9:30 மணிக்கும் ஒளிபரப்பாகிற பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி இம்முறையும் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்து வருகிறது. அதில் மொத்தம் 18 போட்டியாளர்கள் உள்ளே நுழைந்தனர்.

1. மதுமிதா (ஆடை வடிவமைப்பாளர்)
2. இசைவாணி (கானா பாடகி)
3. அபிஷேக் (விமர்சகர்)
4. ராஜு ஜெயமோகன் (சீரியல் நடிகர்)
5. பிரியங்கா தேஷ்பாண்டே (தொகுப்பாளினி)
6. அபினய் வட்டி (நடிகர்)
7. சின்னப்பொண்ணு (நாட்டுப்புற பாடகி)
8. பவானி ரெட்டி (சீரியல் நடிகை)
9. நதியா (மலேஷியாவை சேர்ந்த மாடல் அழகி)
10. இமான் அண்ணாச்சி (நகைச்சுவை நடிகர்)
11. வருண் (நடிகர்)
12. ஐக்கி பெரி (ராப் பாடகி)
13. அக்‌ஷரா ரெட்டி (மாடல் அழகி)
14. நிரூப் நந்தகுமார் (நடிகர்)
15. நமீதா மாரிமுத்து (மாடல் அழகி)
16. சிபி சந்திரன் (மாஸ்டர் பட நடிகர்)
17. சுருதி ஜெயதேவன் (மாடல் அழகி)
18. தாமரைச் செல்வி (நாடக கலைஞர்)

பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியின் முக்கிய போட்டியாளராக எதிர்பார்க்கப்பட்ட நமீதா திடீரென பிக்பாஸில் இருந்து வெளியேறி விட்டார்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நமிதா மாரிமுத்து முதல் வாரத்திலேயே திடீரென வெளியேறியது ஏமாற்றமாக அமைந்தது. 2-வது வாரத்தின் முதல் நாளே பிக்பாஸ் வீட்டின் முதல் கேப்டன் தேர்வுக்கான போட்டி மற்றும் நாமினேஷன் ப்ராசஸ் நடைபெற்றது. இதில் பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியின் முதல் கேப்டனாக தாமரைச்செல்வி தேர்வு செய்யப்பட்டார். நாமினேஷன் ப்ராசஸ்-ல் தாமரைச்செல்வி மற்றும் பாவனியை தவிர மற்ற அனைத்து ஹவுஸ் மேட்களும் எவிக்சனுக்கு நாமினேட் செய்யப்பட்டார்கள்.

நேற்று இரவு ஒளிப்பரப்பான எபிசோடு வரை இசைவாணி, சின்னப்பொண்ணு, இமான், பாவ்னி, ஐக்கி, மதுமிதா, ஸ்ருதி, நமீதா என 17 போட்டியாளர்களும் கதை சொல்லி முடித்துவிட்டனர்.

வார இறுதியான இன்று கமல்ஹாசனுடன் போட்டியாளர்களுடன் கலந்துரையாடும் எபிசோடு ஒளிப்பரப்பாகும். இந்த 2 நாட்களில் 17 போட்டியாளர்களில் ஒருவர் வீட்டை விட்டு வெளியேறுவார்.

தற்போது எவிக்‌ஷன் லிஸ்டில் தலைவர் தாமரை செல்வி மற்றும் பாவனி தவிர மற்ற 15 போட்டியாளர்களும் உள்ளனர். வீட்டில் 8 ஓட்டுகள் வாங்கி லீடிங்கில் இருப்பவர் இசைவாணி தான். ஆனால் அவர் இந்த வாரம் மக்களால் காப்பாற்றப்படுவார் என தெரிகிறது.

வயதில் மூத்தவராக இருக்கும் சின்ன பொண்ணு அல்லது அபிஷேக் என இருவரில் யாரேனும் ஒருவர் வெளியே செல்வார்கள் என தெரிகிறது.

அதுக்குறித்த ப்ரோமோ தான் தற்போது வெளியாகியுள்ளது. வீட்டை விட்டு வெளியே செல்வது யார்? என்ற கேள்விக்கான விடை இன்றே கிடைத்துவிடும் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

Bigg Boss 5 Tamil Elimination Final Voting Result

 • Priyanka Deshpande – 18% vote share
 • Raju – 12% vote share
 • Akshara Reddy – 11% vote share
 • Nadia Chang – 8% vote share
 • Niroop Nandakumar – 8% vote share
 • Abhinay Vaddi – 6% vote share
 • Imman Annachi – 6% vote share
 • Varun- 6% vote share
 • Iykki- 5% vote share
 • Isaivani – 5% vote share
 • Madhumitha- 5% vote share
 • Ciby- 4% vote share
 • Suruthi- 3% vote share
 • Abhishek Raja – 2% vote share
 • Chinna Ponnu- 1% vote share

More articles

Latest article