சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் சாய்தரம் தேஜ்….!

Must read

நடிகர் சீரஞ்சீவியின் சகோதரி மகன் சாய்தரம் தேஜ் செப்டம்பர் 10-ம் தேதி மாலை ஹைதராபாத்தின் மாதாப்பூர் பகுதியில் விபத்தில் சிக்கினார். இதில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சுமார் ஒரு மாத சிகிச்சைக்குப் பிறகு இன்று (அக்டோபர் 15) வீடு திரும்பியுள்ளார் சாய்தரம் தேஜ். இன்று அவருடைய பிறந்த நாளாகும்.

இதனை சிரஞ்சீவி தனது ட்விட்டர் பதிவில்:

“இந்த விஜயதசமி நாளின் மற்றுமொரு சிறப்பம்சம், விபத்தில் அதிசயமாகத் தப்பித்து தற்போது முழுமையாக குணமாகி சாய் தரம் தேஜ் வீடு திரும்புகிறார் என்பதே. இது எங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியைத் தந்துள்ளது. அவருக்கு இது மறுபிறவியே தவிர வேறொன்றுமில்லை. அத்தை, பெரிய மாமாவின் பிறந்த நாள் வாழ்த்துகள் தேஜு. வாழ்க வளமுடன்”. என சிரஞ்சீவி தெரிவித்துள்ளார்.

More articles

Latest article