ரத்தினசிவா இயக்கத்தில் அருண் விஜய், கார்த்திகா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘வா டீல்’.

ஹேம்நாத் மோகன் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் விநியோக உரிமையை ஜே.எஸ்.கே நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

2012-ம் ஆண்டிலிருந்து இந்தப் படம் தயாரிப்பில் உள்ளது. படத்தின் மீதான பைனான்ஸ் சிக்கலால் வெளியாகாமல் உள்ளது.தற்போது தீபாவளி வெளியீடு என்று படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் தீபாவளி விருந்தாக வெளிவரும் அருண் விஜய்யின் வா டீல் படத்தின் டீசர் இன்று வெளியானது.