‘தி டெய்லி ஷோ’ டி.வி. நிகழ்ச்சியில் டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் பங்கேற்றார்.

அவரிடம் சமீபத்தில் நடந்த சுவாரஸ்ய சம்பவம் குறித்து நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ட்ரெவர் நோவ் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த ரோஜர் பெடரர் இரு வாரங்களுக்கு முன்பு தான் தற்செயலாக லண்டன் செல்லவேண்டி இருந்ததாகவும் பொழுதை கழிக்க விம்பிள்டன் டென்னிஸ் கிளப்பிற்கு செல்ல நினைத்ததாகவும் கூறினார்.

எந்த வித திட்டமிடலும் இன்றி லண்டன் வந்ததால் தன்னிடம் உறுப்பினர் அட்டை கொண்டுவரவில்லை இருந்தபோதும் விம்பிள்டன் போட்டியில் வெற்றி பெரும் ஒருவர் விம்பிள்டன் டென்னிஸ் கிளப்பில் தானாகவே உறுப்பினராக சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.

இந்த விவரம் அங்குள்ளவர்களுக்கு நன்கு தெரியும் என்பதால் விம்பிள்டன் கிளப்பை நோக்கி தனது பயிற்சியாளருடன் பெடரர் சென்றுள்ளார்.

அங்கு வாசலில் நின்றிருந்த பெண் காவலாளியிடம் தற்செயலாக “நான் உறுப்பினர் அட்டை கொண்டுவர மறந்துவிட்டேன் எந்த வாயில் வழியாக உள்ளே செல்வது” என்று கேட்டுள்ளார்.

அதற்கு அந்த காவலாளி “உறுப்பினர் அட்டை இல்லாமல் உள்ளே செல்ல முடியாது” என்று மறுத்துள்ளார்.

பெடரரோ “நான் விம்பிள்டன் போட்டியில் எட்டு முறை சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறேன்” என்று கூறியபோது கூட இவர் யார் என்பது தெரியாமல் உள்ளே செல்ல அனுமதி மறுத்திருக்கிறார்.

பின்னர் என்ன செய்வது என்று தெரியாமல் வேறு வாயில் வழியாக செல்ல முயற்சித்தபோது அங்கிருந்த காவலாளி இவரை அடையாளம் கண்டு பெடரருடன் செல்பி எடுத்துக்கொண்டதோடு உள்ளே அனுமதித்திருக்கிறார்.

மேலும், உள்ளே சென்ற பின் பக்கத்து வாயிலில் நீண்டிருந்த தன்னை உள்ளே அனுமதிக்க மறுத்த காவலாளியை பார்த்து நான் உள்ளே வந்துவிட்டேன் என்று கையசைக்க தோன்றியது, ஆனால் அவரது கடமையை அவர் செய்தார் என்பதற்காக நான் அப்படி செய்யவில்லை என்று கூறினார்.

இந்த சம்பவம் குறித்து ரோஜர் பெடரர் பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.