ராஞ்சி, ஐதராபாத்,

கொரோனா பரவல் காரணமாக ஜார்க்கண்ட் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

நாடெங்கும் வேகமாகப் பரவி வரும் கொரோனா பரவலைத் தடுக்க மாநில அரசுகள் தீவிர கட்டுப்பாடு விதிகளை அறிவித்துள்ளன.  இது அநேகமாக மூன்றாம் அலை பரவலாக இருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.  எனவே கட்டுப்பாடுகள் தீவிரமாக்கப்பட்டு வருகின்றன.

ஜார்க்கண்ட் மாநில சுகாதார அமைச்சர், “கொரோனா பரவலைத் தடுக்க மாநிலம் எங்கும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.  திருமணங்களில் கலந்து கொள்ள 100 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது.  மேலும் இறுதிச் சடங்குகளில் 50 பேருக்கு மட்டுமே அனுமதி,  மறு உத்தரவு வரும் வரை அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்படும்” என அறிவித்துள்ளார்.

இதிஅப் போல் தெலுங்கானா மாநில முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அம்மாநிலத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் ஆகிய அனைத்துக் கல்வி நிறுவனங்களும் வரும் 8 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை மூடப்படுவதாக தெரிவித்துள்ளார்.  இந்த நடவடிக்கை கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறி உள்ளார்.