டில்லி

த்திய அரசு ஊழியர்களுக்கு கொரோனா பரவல் காரணமாக பயோமெட்ரிக் வருகை பதிவு முறை நிறுத்தப்படுகிறது.

ஒமிக்ரான் பரவல் நாடெங்கும் கடுமையாக அதிகரித்து வருகிறது.  இதனால் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளது.  நேற்று ஒரே நாளில் 33,780 பேர் பாதிக்கப்பட்டு அதில் 123 பேர் உயிர் இழந்துள்ளனர். நேற்று வரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3.49 கோடி ஆகி அதில் 4.80 லட்சம் பேர் உயிர் இழந்துள்ளனர்.

இது கொரோனா மூன்றாம் அலை பரவலாக இருக்கலாம் என அஞ்சப்படுகிறது  கொரொனா பரவலைக் கட்டுப்படுத்த மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.   பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமலாக்கப்பட்டுள்ளது.

நேற்று மத்திய தொழில் நுட்பத்துறை அமைச்சர் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.  அதன்படி இனி மத்திய அரசு ஊழியர்களுக்கான பயோ மெட்ரிக் வருகைப் பதிவு முறை நிறுத்தப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.  மேலும் மறு உத்தரவு வரும் முறை பயோமெட்ரிக் பதிவு முறை நிறுத்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.