புதுச்சேரியில் தடுப்பூசி போடாத அரசு ஊழியர்களுக்கு கட்டாய விடுப்பு

Must read

புதுச்சேரி

புதுச்சேரி அரசு தடுப்பூசி போட்டுக் கொள்ளாத அரசு ஊழியர் அனைவருக்கும் கட்டாய விடுப்பில் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரசான ஒமிக்ரான் பரவல் உலகின் பல நாடுகளிலும் அதிகரித்து வருகிறது.  இந்த பாதிப்பு இந்தியாவிலும் அதிகரிக்கிறது.  இதனால் நாடெங்கும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதையொட்டி அனைத்து மாநில அரசுகளும் கட்டுப்பாட்டு விதிகளைக் கடுமையாக்கி உள்ளது.   கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டோருக்கு ஒமிக்ரான் பரவலால் அதிக பாதிப்பு இருக்காது என மருத்துவ நிபுணர்கள் கூறி உள்ளனர்.  பல மாநிலங்களில் முகக் கவசம் அணிவதும் கட்டாயமாகி உள்ளது.

அவ்வகையில் புதுச்சேரி அரசு 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாத அரசு ஊழியர்களைக் கட்டாய விடுப்பில் அனுப்ப உத்தரவு இட்டுள்ளது.  மேலும் அலுவலக வளாகங்களில் அனைவரும் எப்போதும் முகக் கவசம் கட்டாயமாக அணிந்திருக்க வேண்டும் எனவும் சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

More articles

Latest article