டில்லி

ர்நாடகாவில் பழைய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தியதாக எழுந்த புகாருக்குத் தலைமைத் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

நேற்று முன் தினம் கர்நாடக சட்டப்பேரவைக்கு ஒரேகட்டமாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது, நாளை தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளன.  கடந்த மே 8ம் தேதி காங்கிரஸ் சார்பில் தேர்தல் குழுவுக்கு ஒரு கடிதம் அனுப்பபட்டது.

அந்தக் கடிதத்தில்,

“தென்னாப்பிரிக்கா தேர்தலில் முன்பு பயன்படுத்தப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள் சோதனை செய்யப்படாமல் கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்கு மறுபடியும் பயன்படுத்தப்படுகிறது. இது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும்”

என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த குற்றச்சாட்டைத் தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலாவுக்கு தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ள கடிதத்தில்,

“தென்னாப்பிரிக்காவில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுவதில்லை. கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலுக்கு எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா தயாரித்த புதிய வாக்குப்பதிவு இயந்திரங்களே பயன்படுத்தப்பட்டன”

என்று தெரிவித்துள்ளது.