புதுடெல்லி:
ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்த நீதிபதியின் பதவி உயர்வை நிறுத்திவைத்தது உச்சநீதிமன்றம். பழைய பதவியிலேயே நீதிபதி தொடர வேண்டும் எனவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவதூறாக பேசியதாக கூறிய வழக்கில் அவருக்கு இரண்டு ஆண்டுகள் தண்டனை விதித்த தலைமை நீதித்துறை நீதிபதி ஹரிஷ் ஹஸ்முக்பாய் வர்மா உட்பட 68 நீதித்துறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் இன்று வழங்கியது.