ஆளுநர் மாளிகையில் நடைபெற இருந்த குடியரசு தின விருந்து ரத்து

Must read

சென்னை

கொரோனா பரவல் காரணமாக ஆளுநர் மாளிகையில் நடைபெற இருந்த குடியரசு தின விருந்து ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் தேதி அன்று குடியர்சு தின விழா சிறபாக நடக்கும்.  அப்போது டில்லியில் நடைபெறும் அணிவகுப்பு மற்றும் ஊர்வலம் மிகவும் புகழ் பெற்றதாகும்.   இதைப் போல் தமிழகத்திலும் கடற்கரையில் மிகப் பிரம்மாண்டமாக அணிவகுப்பு ஊர்வலம் நடைபெறும்.

குடியரசு தினத்தன்று மாலை ஒவ்வொரு வருடமும் ஆளுநர் மாளிகையில் முக்கிய புள்ளிகளுக்கு ஆளுநர் விருந்து அளித்து கவுரவிப்பது வழக்கமாகும்.   ஆனால் இந்த ஆண்டு குடியரசு தினமான ஜனவரி 26 அன்று அந்த விருந்து ரத்து செய்யப்படுவதாக ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது.

தற்போது கொரோனா பரவி வருவதால் தமிழக அரசு ஒரே இடத்தில் பலர் கூடுவதைத் தடை செய்துள்ளது.  அந்த அறிவிப்பில் இதைச் சுட்டிக் காட்டி பொதுமக்களின் நலனுக்காக ஆளுநர் இந்த விருந்தை ரத்து செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

More articles

Latest article