திருப்பூர்

டுமலை சங்கர் என்ற இளைஞர் ஆணவக்கொலை செய்யப்பட்டது தொடர்பான  வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்பட்டது.

இந்த கொலை வழக்கில் 11 பேர் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது 6 பேருக்கு இரட்டை தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் 13-ம் தேதி நடைபெற்ற இந்த ஆணவக்கொலையில், விசாரணை கடந்த மாதம் முடிவடைந்ததை தொடர்ந்து, இன்று தீர்ப்பு வெளியிடப்பட்டது.

அதன் காரணமாக குற்றவாளிகள் 11 பேரும் இன்று நீதி மன்றத்தில் ஆஜராகினர். அதைத் தொடர்ந்து நீதிபதி அலமேலு நடராஜன் தீர்ப்பை அறிவித்தார்.

இந்த கொடூர கொலை வழக்கில்,  கவுசல்யாவின் தந்தை சின்னசாமி உள்பட 6 பேருக்கு இரட்டை தூக்கு தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு கூறினார்.

மேலும்,  ஸ்டீபன் தன்ராஜூ என்பவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், ‘1வது குற்றவாளி யான எம். மணிகண்டனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

மேலும், இந்த வழக்கில் இருந்து கவுசல்யாவின் தாயார், தாயார் அன்னலட்சுமி, பாண்டித்துரை, பிரசன்ன குமார்  ஆகிய 3 பேர் விடுதலை செய்யப்படுவதாகவும் அறிவித்துள்ளார்.

பரபரப்பான இந்த வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்பட்டதை தொடர்ந்து பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.