சென்னை:

ஜெயலலிதாவுக்கு அதிக அளவு ஸ்டீராய்டு மருத்து கொடுத்ததால்தான் அவர் உடல்நிலை கடுமையான பாதிப்புக்கு உள்ளானது என்று அக்குபஞ்சர் மருத்துவர் சங்கர் பகீர் தகவலை தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளதாக எழுந்த புகார்களை தொடர்ந்து,  அதுகுறித்து விசாரித்து, உண்மையை தெரிவிக்க  ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் தமிழக அரசால் அமைக்கப்பட்டது.

இந்த ஆணையம்ஜெ யலலிதா மரணம் தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் ஆணையத்தில் ஆஜராகி விவரங்களை தெரிவிக்கலாம் என்று அறிவித்தது. அதன்படி ஏராளமானோர் ஜெ. மரணம் குறித்த தகவல்களை அனுப்பி இருந்தனர்.

அதைத்தொடர்ந்து ஜெ.மரணம் தொடர்பாக அரசு மருத்துவர்கள் உள்பட பல மருத்துவர்களையும்,

ஜெயலலிதாவுடன் தொடர்பு உடையவர்களையும், அவருக்கு சிகிச்சை அளித்தவர்களையும் அழைத்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில், இன்றைய விசாரணைக்கு அக்குபஞ்சர் மருத்துவர் சங்கர் ஆணையத்தில் ஆஜரா னார். அவரிடம் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை மேற்கொண்டார். அப்போது, ஜெயலலிதா மரணம் தொடர்பாக பல்வேறு தகவல்களை அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

மேலும், ஜெயலலிதாவுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதும், அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளித்துள்ளனர் என்றும்,  மேலும், அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்படு வதற்கு முன்பாகவெ  அவருக்கு ஸ்டீராய்டு மருந்து தரப்பட்டுள்ளது என்றும், அந்த  மருந்து சற்று அதிக அளவில் கொடுக்கப்பட்டு விட்டது.

அதன் காரணமாகவேத்தான்  ஜெயலலிதாவின் உடல்நலம் கடுமையான பாதிப்புக்கு உள்ளானது என்று  டாக்டர் சங்கர் கூறியுள்ளார்.

அக்குபஞ்சர் மருத்துவரின் இந்த பகீர் தகவல் அதிமுகவினரிடையே  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.