சென்னை: நடிகர் விஜய் பெயரில் கட்சி தொடங்கப்போவதாக அறிவித்த அவரது தந்தை எஸ்ஏ.சந்திரசேகர் (எஸ்ஏசி), குடும்பத்தில் எழுந்த பிரச்சினை காரணமாக, ஆளை விடுங்கப்பா கட்சியே வேண்டாம் என் தெரிவித்துள்ள நிலையில், அது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கும் கடிதம் எழுதி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில்,  விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரின் தரப்பில்,  அரசியல் கட்சியை பதிவு செய்ய தேர்தல் ஆணையத்தில் கடந்த 5ஆம் தேதி (நவம்பர் 2020)  விண்ணப்பிக்கப்பட்டது. மாநிலத் தலைவர் பதவியில் பத்மநாபனும், பொதுச் செயலாளர் என்ற இடத்தில் விஜய் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரின் பெயரும், பொருளாளர் என்ற இடத்தில் தாயார் ஷோபா பெயரும் இடம்பெற்றிருந்தது. இதனால், ஏற்கனவே பல படங்களில்  சினிமா நிகழ்வுகளிலும் ர அரசியல் பஞ்ச் டயலாக் பேசி தனது ரசிகர்களை உசுப்பேததி வந்த விஜய் கட்சி தொடங்கி விட்டதாக கூறப்பட்டது.

ஆனால்,  விஜயோ,  தனக்கும், இந்த கட்சிக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை; ரசிகர்கள் அந்த கட்சியில் இணைய வேண்டாம் என விஜய் அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டார்.  ஆனால்,  அவரது  தந்தை  எஸ்ஏசியோ, தான்தான் கட்சியின் பெயரை பதிவு செய்ய விண்ணப்பித்து உள்ளதாக தெரிவித்தார்.

இதன் காரணமாக, தந்தை மகன் இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடு வெளிச்சத்துக்கு வந்தது.  குடும்பத்தில் நடைபெற்று வந்த சண்டை சச்சரவுகள் வெளி உலகத்துக்கு தெரிய வந்தன.  எஸ்ஏசியும், விஜய் ரசிகர் மன்றம் என்னுடைய அமைப்பு. அதை இயக்கமாக மாற்றிய போது அதன் நிறுவனராக நான்தான் இருந்தேன். அதை தற்போது நான் கட்சியை அரசியல் கட்சியாக மாற்றி உள்ளேன். எனது மனைவி சோபாவுக்கு அரசியல் கட்சியில் சேர விருப்பம் இல்லை என்றால் அவர் விலகிக் கொள்ளட்டும். அவருக்கு பதிலாக நான் வேறு ஒருவரை பொறுப்பாளராக போடுவதில் எந்த பிரச்சினையும் இல்லை. எல்லா அப்பா மகனைப் போல எனக்கும் விஜய்க்கும் அவ்வப்போது சண்டை வரும் பேசாமல் இருப்பது சாதாரணமானதுதான் என ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்திருந்தார்.

இந்த நிலையில்,  சில நாட்களுக்கு முன்பு அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் தலைவர் பத்மநாபனும் விலகினார். மேலும் குடும்பத்துக்குள் எழுந்த எதிர்ப்பு காரணமாக கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான எஸ்ஏசி   கட்சியே வேண்டாம் என்கிற முடிவுக்கு வந்திருக்கிறார்.

தனது கட்சி தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்துக்கு எஸ்.ஏ.சந்திரசேகர்  இ.மெயில் மூலம் கடிதம்  அனுப்பி இருப்பதாகவும், அதில் , “அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தை கட்சியாக பதிவு செய்ய வேண்டாம்” என  தெரிவித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

கட்சி ஆரம்பித்த சில நாட்களிலே தலைவர், குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினை, மகனே தந்தைக்கு எதிராக போர்க்கொடி தூக்கியது, மனைவி ஷோபாவும் கணவருக்கு எதிராக  பொருளாளர் விலகியதாலும்  இந்த முடிவை எஸ்.ஏ.சி எடுக்க நேரிட்டதாக திரையுலக தகவல்கள் தெரிவிக்கின்றன.