சென்னை

நிவர் புயல் அடுத்த 24 மணி நேரத்தில் உருவாகும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வங்கக் கடலின் தென்மேற்கு பகுதியில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி மண்டலம் வலுப்பெற்றுள்ளது.  இந்த மண்டலம் சென்னையில் இருந்து 740 கிமீ தொலைவிலும் காரைக்காலில் இருந்து 700 கிமீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.  இதனால் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளை நாளை கனமழை பெய்யலாம் என வானிலை மைய அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள், உள் தமிழகம் மற்றும் வட தமிழகம் மாவட்டங்களிலும் 24 மற்றும் 25 ஆம் தேதிகளில் மிக கனமழை மற்றும் அதீத கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  குறிப்பாக 24 ஆம் தேதி அன்று புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், காரைக்கால், நாகப்பட்டினம், கடலூர், அரியலூர் பெரம்பலூர் மாவட்டங்களிலும் 25 ஆம் தேதி டெல்டா, கடலூர், கள்ளக்குறிச்சி, புதுச்சேரி, விழுப்புரம் திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் அதீத கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலின் தென்மேற்கு பகுதியில் உருவான ஆழ்ந்த தாற்றத்தழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரங்களில் புயலாக மாறும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.   நிவ்ர் புயல் என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிககைகள் எடுக்கப்பட்டுள்ளன.  இந்த நடவடிக்கைகள் குறித்து வருவாய்த்துறை, பொதுப்பணித் துறை உள்ளிட்ட அதிகாரிகளுடன் தலைமைச் செயலர் சண்முகம் தொடர்ந்து ஆலோசனைகள் நடத்தி வருகிறார்.