சென்னை: காவிரி விவகாரத்தில் திமுக உறுதியுடன் இருக்கும் என தமிழக சட்டப்பேரவையில்  தனித்தீர்மானத்தை தாக்கல் செய்து முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார்.

காவிரி உரிமையை காப்பத்தில் திமுக உறுதியுடன் இருக்கும் என்று  தனி தீர்மானத்தை கொண்டு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,  ஆளுங்கட்சியாக இருந்தாலும் எதிர்கட்சியாக இருந்தாலும் காவிரி விவகாரத்தில் திமுக உறுதியுடன் இருக்கும் என  உறுதியளித்துள்ளார்.

நிகழாண்டின் 2-ஆம் சட்டப்பேரவைக் கூட்டத்தொடா், சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள பேரவை மண்டபத்தில் பேரவைத் தலைவர் அப்பாவு தலைமையில் காலை 10 மணிக்கு கூடியுள்ளது. முதற்கட்டமாக மறைந்த தலைவர்கள், எம்எல்ஏக்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, சட்டமன்ற  கூட்டத்தில்  உறுப்பினர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர்.

இதைத்தொடர்ந்து, காவிரி நீரை திறந்துவிட கா்நாடகத்தையும் மத்திய அரசையும் வலியுறுத்தி முதல்வா் மு.க.ஸ்டாலின் தீா்மானம் கொண்டு வந்துள்ளார்.

அதில், கர்நாடகாவில் போதிய அளவு நீர் இருந்த போதிலும் தண்ணீர் திறக்கவில்லை என்றும், “ 9.19 டிம்எம்சி கிடைக்கவேண்டிய நிலையில் 2.283 டிஎம்சி மட்டுமே கிடைத்துள்ளது. மத்திய அமைச்சரை சந்தித்து நீர்வளத்துறை அமைச்சர் தொடர்ந்து இது குறித்து வலியுறுத்தியுள்ளார். நீதிமன்ற உத்தரவையும் கர்நாடக அரசு பின்பற்றவில்லை. கர்நாடகாவில் உள்ள நான்கு அணைகளிலும் நீர்வரத்து போதுமானதாக இருந்த போதிலும் நீர் திறக்கவில்லை” என குற்றம் சாட்டியதுடன், நீரை பெறுவதற்கு தேவையான சட்ட நடவடிக்கையை  தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும்  என்றார்.

மேலும், தனி தீர்மானத்தில், “தமிழ்நாடு அரசு மேற்கொண்ட தொடர் முயற்சிகளை எடுத்து ஜூலை 21 ஆம் தேதி கபினி அணையிலிருந்து அடுத்த ஆறு நாட்களுக்கு தண்ணீர் திறக்க கர்நாடக மாநில அரசுக்கு உத்துவிடப்பட்டது. சட்ட வல்லுநர்களுக்கு ஆலோசித்து நீரை பெறுவதற்கு தேவையான சட்ட நடவடிக்கை தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும்” என்றார்.

காவிரியில் தமிழக உரிமையை நிலைநாட்ட ஜூலை 17ஆம் தேதி முதல் மத்திய அரசை வலியுறுத்தி வருகிறோம். ஆனால் செயற்கையான நெருக்கடிய கர்நாடக அரசு உருவாக்கி வருகிறது.

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்திற்கான காவிரி நீரை கர்நாடகம் திறந்து விட வேண்டும். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி மாத வாரியாக தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க வலியுறுத்தினோம் என்றார்.

“இந்த அரசு பொறுப்பேற்ற பின்பு மேட்டூர் அணை உழவர்களுக்கு சீராக திறந்து விடப்பட்டு வருகிறது. 2021-46.2 லட்சம் நெல் உற்பத்தி, 2022- 40.9 லட்சம் டன் நெல் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. தண்ணீர் திறந்து விடப்பட்டதால் இந்த வளர்ச்சி கிடைத்துள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.