சென்னை: தமிழக சட்டப்பேரவையில்  இன்றைய கேள்வி நேரத்தின்போது பல்வேறு கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் கூறிய நிலையில், முன்னாள் அமைச்சர் அதிமுக செல்லூர் ராஜூக்கு பதில் அளித்த அமைச்சர் துரைமுருகன், அணைகள் காலியாகாமல் இருக்க தெர்மாகோல் கொண்டு மூடி வைத்துள்ளதாக கூறினார். இதனால்  அவையில் சிரிப்பலை எழுந்தது.

தமிழ்நாடு குளிர்க்கால சட்டப்பேரவை இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. முதலாவதாக மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனை தொடர்ந்து உறுப்பினர்களின் கேள்விக்கு  பதிலளித்து வருகின்றனர்.

முதலமைச்சராக மு.க ஸ்டாட்லிஜ் பொறுப்பேற்ற பின் 123 இடங்களில் ரூ.21,729 கோடி மதிப்பில் கூட்டுக்குடிநீர் திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. சத்தியமங்களத்தில் கூட்டுக்குடிநீர் திட்டம் அமைக்கப்படுமா என்ற உறுப்பினர் பண்ணாரியின் கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதிலளித்துள்ளார். 

அதுபோல, கிராமம் மந்நும்  பிறப்பகுதிகளின் கால்நடைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அந்த பகுதிகளில் கால்நடை மருந்தகமோ, மருத்துவமனையோ அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. லால்குடி சட்டமன்ர உறுப்பினர் சவுந்திரப்பாண்டியனின் கேள்விக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பதில் அளித்துள்ளார்.

தெலுங்கானா மாநிலத்தில் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம் தொடக்கப்பட்டதை குறிப்பிட்டு பொதுப்பணித் துறை அமைச்சர் ஏ.வ.வேலு பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு புகழாரம். முன்னோடி திட்டத்தை முதன்முதலில் தொடங்கியவர் என்று பாராட்டு தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று  வினாக்கள் விடைகள் நேரத்தில், மதுரை மாநகருக்கு சுத்தமான குடிநீர் வழங்கப்பட வேண்டும் என்றும், அ.தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டத்தை விரைவில் நிறைவேற்ற வேண்டும் எனவும், மதுரை மாநகரில் சாக்கடை நீரும் குடிநீருடன் கலந்து வரக்கூடிய நிலையில் அரசு பணிகளை விரைவுப்படுத்த வேண்டும் எனவும் சட்டமன்ற உறுப்பினர் செல்லூர் ராஜு கோரிக்கை வைத்தார்.

இதற்கு பதிலளித்து பேசிய நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, கம்பத்தில் இருந்து மதுரைக்கு நீர் கொண்டு செல்லும் பணியை அ.தி.மு.க. ஆரம்பித்தாலும் கிணறு தோண்டும் அனுமதியை பெறாமல் இருந்ததாகவும், 160 எம்.எல்.டி தண்ணீர் கொண்டு வர பணிகள் நடைபெற்று வருகிறது என்றும், கடந்த ஆட்சியில் 60 கிலோ மீட்டருக்கு பைப் லைன் போடாமல் விட்ட நிலையில் தற்போது அந்த பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருவதாகவும், 15 கிலோ மீட்டர் பைப் லைன் போட வேண்டிய பணிகள் உள்ளதால் அந்த பணிகளும் விரைவில் நிறைவு பெற்று முதலமைச்சர் சுத்தமான குடிநீர் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைப்பார் எனவும் கூறினார்.

அப்போது குறுக்கீட்டு பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நிச்சயமாக தண்ணீர் கிடைக்கும் என்றும், அணைகள் காலியாகாமல் இருக்க தெர்மாகோல் கொண்டு மூடி வைத்துள்ளோம். எனவே கவலைப்பட வேண்டாம் என கூறியதால் அவையில் சிரிப்பலை எழுந்தது.