கரூர்: கரூர் பகுதியில் தரமற்ற சாலைகள் போடப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அந்த சாலைகளை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு நடத்தினார். அப்போது, தரமற்ற சாலைகள் என கூறப்படுவது பொய் புகார் என்று கூறினார்.

கரூர் மாவட்டம் தரங்கம்பட்டியில் இருந்து வீரசிங்கம்பட்டி கிராமத்திற்கு சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஒரு கோடியே 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தார் சாலை  போடப்பட்டது. இந்த  தார் சாலை, தரமற்ற முறையில் போடப்பட்டு உள்ளதாகவும்,  கைகளால் பெயர்த்தெடுக்கும் அளவுக்கு இருந்ததால் கிராம மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுதொடர்பாக பெரும்பாலான ஊடகங்களில் வீடியோவுடன் செய்தி வெளியாகின. இதனால், அதிர்ச்சி அடைந்த திமுக அரசு, மாவட்ட ஆட்சியரை விட்டு, பொய் புகார் கூறுபவர்கள்மீது நடவடிக்கை எடுப்பதாக எச்சரிக்கை விடுத்தது.

இந்த நிலையில், இன்று மாவட்ட ஆட்சியர் அதிகாரிகளுடன் சென்று நெடூஞ்சாலைகளை ஆய்வு செய்தார். அப்போது, பொதுமக்கள் குறிப்பிட்ட இடங்களில் ஆய்வு செய்யாமல் வேறு இடத்தில் செய்ததுடன், சாலை தரமாக போடப்பட்டு உள்ளதாகவும், பொய்புகார் கொடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

தரமற்ற சாலை: முறைகேட்டை வெளிப்படுத்தியவர்கள்மீது நடவடிக்கை என கரூர் மாவட்ட ஆட்சியர் மிரட்டல்….வீடியோ