பெங்களூரு

ர்நாடக துணை முதல்வர் டி கே சிவகுமார் தமிழகத்துக்கு காவிரி நீரை கூடுதலாக திறந்து விட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

டில்லியில் காவிரி நீர் பிரச்சினை தொடர்பாக காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் டெல்லியில் நடைபெற்ற போது தமிழகத்திற்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி வீதம் 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்கும்படி கர்நாடகத்திற்கு உத்தரவிடப்பட்டது.

அந்த உத்தரவின்படி கர்நாடக அரசு காவிரியில் தண்ணீரை கர்நாடகாவில் இருந்து தற்போது தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.   இதற்கு கர்நாடகா மாநிலத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது..

இது குறித்து கர்நாடக துணை முதல்வர் டி கே சிவகுமார்,

காவிரி மேலாண்மை ஆணையம் கூறியதை விட தமிழகத்திற்கு கூடுதலாகவே கவிரி நீரை திறந்துவிட்டுள்ளோம். நாங்கள் எற்கனவே நிர்ணயித்த அளவை விட கூடுதலாக நீரைத் திறந்து விட்டதாக தமிழகத்திடம் கூறிவிட்டோம்.

தற்போது கர்நாடக மாநில அணைகளில் போதுமான தண்ணீர் இல்லை என்பது தமிழகத்திற்கு நன்கு தெரியும்.இந்த நீர் திறப்பால் கர்நாடகாவில் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர”  

என்று தெரிவித்துள்ளார்.