போபால்:

த்திய பிரதேச மாநிலத்தில், கொரோனா சிகிச்சையிலும் பாகுபாடு காட்டப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அம்மாநில முதன்மைசெயலாளர் மகனுக்கு கொரோனா தொற்று அறிகுறி உள்ள நிலையில், மாநில அரசின் கெஸ்ட்ஹவுசில் வைத்து சிகிச்சை அளிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசை கவிழ்த்துவிட்டு, பாஜக அரசை கைப்பற்றி ஆட்சி செய்து வருகிறது. மாநிலத்தின் முதன்மைச் செயலாளராக பல்லவி ஜெயின் (Pallavi Jain Govil ) இருந்து வருகிறார்.

இவரது மகன் வெளிநாட்டில் இருந்து சமீபத்தில் தாயகம் திரும்பிய நிலையில், அதை, பல்லவி ஜெயின் மறைத்ததாக குற்றம்சாட்டப்பட்டு உள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்பியவர்கள் உடனே மாநில அரசுக்க தகவல் தெரிவித்து, தனிமைப்படுத்துதலில் இருக்க வேண்டும், தேவைப்பட்டால் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய மாநில அரசுகள் அறிவுறுத்தி உள்ளன.

ஆனால், பல்லவி ஜெயினி மகன், அரசு உத்தரவை மதிக்காமல், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டதாக கூறப்படுகிறது. தற்போது அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவருடன் தொடர்பில் இருந்த மேலும் 11 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், பல்லவி ஜெயின் தனது மகனை அரசு மருத்துவமனையில் அனுமதிக்காமல், மாநில அரசின் கெஸ்ட் ஹவுசில் வைத்து சிகிச்சை அளித்து வருவதாக கூறப்படுகிறது.

அரசின் உத்தரவுகளை துஷ்பிரயோகம் செய்து, மகனின் வெளிநாடு பயணத்தை மறைந்து,  தனது மகனுக்கு மட்டும்  பிரத்யேக மருத்துவசதி செய்து கொடுத்துவரவதாக பல்லவி ஜெயின்மீது குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

பொதுமக்களிடையே பீதியை கிளப்பி  வரும் கொரோனா நோயிலும் பாகுபாடா என்று சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.