டெல்லி: ஒரு அரசியல்வாதி ஒரு சாதாரண குடிமகனை விட “சிறப்பு அந்தஸ்து” எதையும் கோர முடியாது என்று கெஜ்ரிவால் வழக்கில் அவருக்கு ஜாமின் வழங்க கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆம்ஆத்மி கட்சி தலைவரும், டெல்லி முதல்வருமான கெஜ்ரிவால் மனுமீது உச்சநீதிமன்றத்தில் காரசாரமான வாதங்கள் நடைபெற்று வருகிறது.  சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஒருவருக்கு தேர்தல் பிரச்சாரம்  செய்ய அனுமதி வழங்குவது என்பது, அடிப்படை உரிமை அல்ல என அமலாக்கத்துறை கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக ஆம்ஆத்மி கட்சிமீது  குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது. இந்தியாவில், ஒரு தேசிய கட்சி மீது, குற்றம் சுமத்தப்பட்டு, குற்றவாளியாக குறிப்பிடப்படுவது இதுவே முதல் முறை  என கூறப்படுகிறது. இந்த குற்றப்பத்திரிகை உச்சநீதிமன்ற விசாரணைக்கு பிறகு தாக்கல் செய்யப்படும் என டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன,.

கலால் கொள்கை ஊழல் தொடர்பான பணமோசடி வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தல் பிரசாரத்திற்கு செல்லும் வகையில்  இடைக்கால ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளார். இந்த வழக்கு காரசாரமான விவாதங்களுடன் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நடைபெற்ற வாதங்களைத் தொடர்ந்து, இன்று கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்குவது குறித்து இன்று அறிவிக்கப்படும் உச்சநீதிமன்றம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. முன்னதாக, அமலாக்கத்துறை தரப்பில் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில , தேர்தலில் போட்டியிடாவிட்டாலும், பிரச்சாரம் செய்வதற்காக எந்த அரசியல் தலைவருக்கும் இடைக்கால ஜாமீன் வழங்கப்படவில்லை என்று அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

“தேர்தலுக்கு பிரச்சாரம் செய்வதற்கான உரிமை ஒரு அடிப்படை உரிமையோ அல்லது அரசியலமைப்பு உரிமையோ அல்ல, சட்டப்பூர்வ உரிமையும் கூட இல்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்” என்றும், ஒரு அரசியல்வாதிக்கு சாதாரண குடிமகனை விட உயர்ந்த “சிறப்பு அந்தஸ்து” எதுவும் கோர முடியாது என்று அமலாக்க இயக்குநரகம் எதிர்த்துள்ளது. 

மேலும், “போட்டியிடும் வேட்பாளராக இல்லாவிட்டாலும், பிரச்சாரம் செய்வதற்காக எந்த அரசியல் தலைவருக்கும் இடைக்கால ஜாமீன் வழங்கப்படவில்லை. போட்டியிடும் வேட்பாளருக்கு கூட தனது சொந்த பிரச்சாரத்திற்காக காவலில் இருந்தால் இடைக்கால ஜாமீன் வழங்கப்படாது” என்றும் அமலாக்கத் துறை கூறியது.

இந்த வழக்கில் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவலை மே 20-ம் தேதி வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. அப்போது,  அரவிந்த் கெஜ்ரிவாலின் கைது நடவடிக்கையை உறுதி செய்து, கைது சட்டவிரோதம் இல்லை என்றும், அவர் மீண்டும் மீண்டும் சம்மன்களைத் தவிர்த்துவிட்டு விசாரணைக்கு ஆஜராக மறுத்ததால் அமலாக்கத் துறை நடவடிக்கைக்கு “சிறிய வழி” விடப்பட்டது என்றும் கூறியது.

இதற்கிடைடியல், டெல்லி மாநில மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வரும் நிலையில்,   மதுபானக் கொள்கை ஊழலுடன் தொடர்புடைய பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையின் புதிய குற்றப்பத்திரிகையில் ஆம் ஆத்மி கட்சி மீது குற்றம் சாட்டியுள்ளது. ஊழல் வழக்கில் ஒரு விசாரணை அமைப்பு தாக்கல் செய்யும் குற்றப்பத்திரிகையில், ஒரு தேசிய கட்சியும் குற்றவாளியாக குறிப்பிடப்படுவது இதுவே முதல் முறை ஆகும். மேலும் குற்றப்பத்திரிகையில் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை குற்றவாளியாக குறிப்பிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மதுபானக் கொள்கை வழக்கில் கெஜ்ரிவாலை முக்கிய சதிகாரர் என்று அமலாக்கத்துறை குறிப்பிடும் என்று கூறப்படுகிறது. கெஜ்ரிவாலுக்கு இடைக் கால ஜாமீன் வழங்குவது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு பிறகு குற்றப் பத்திரிகையை அமலாக்கத்துறை தாக்கல் செய்ய வாய்ப்புள்ளது. நாள் முழுவதும் விசாரணை நடந்தால் குற்றப் பத்திரிகை, நாளை தாக்கல் செய்யப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.