டெல்லி:

கொரோனா தடுப்பு பணிக்கு நிதி தேவைப்படும் நிலையில், தலைநகர் டெல்லியை மறுவடிவமைக்கும் திட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள ரூ.20ஆயிரம் கோடி திட்டத்தை ரத்து செய்து பயன்படுத்துங்கள் என்று பிரதமர் மோடிக்கு, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியாகாந்தி கடிதம் எழுதி உள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் உறுப்பினரும்,  இந்திய தேசிய கிராம தொழிளர்கள் சம்மேளனம்  தேசிய பொதுச்செயலாளருமான  வாழப்பாடி இராம சுகந்தன் நேற்று தனது முகநூலில்,  மத்திய அரசின் நடவடிக்கை குறித்து கருத்து பதிவிட்டிருந்தார்.

அதில், பாராளுமன்ற உறுப்பினர்களின் நிதி இரண்டு ஆண்டு ரத்து செய்யப்படுவது மற்றும், அவர்களின் சம்பளத்தில், 30 சதவிகிதம் பிடித்தம் செய்யப்படும் என்ற மத்தியஅரசின் முடிவை வரவேற்பதாகவும், அதே சமயத்தில், மத்தியஅரசாங்கம் பல்வேறு செலவினங்களையும் குறைக்க வேண்டும் என்றும், குறிப்பாக, தேவையில்லாத ராணுவ ஒப்பந்தங்களை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.

உலக நாடுகள் நாட்டின் வளர்ச்சியில் கவனம் செலுத்தி வருகின்றனர், அதை கருத்தில் கொண்டு, இந்தியா ரஃபேல் போர் விமான ஒப்பந்தங்களை ரத் செய்ய வேண்டும், சமீபத்தில் டெல்லி மறுவடிவமைக்கவும், புதிய பாராளு மன்றம் கட்டுவதற்காகவும்  மத்தியஅரசு ரூ.20ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்வதாக அறிவித்தது, அதை ரத்து செய்ய வேண்டும்,

பல ஒப்பந்தங்கள் செலவினங்கள் மத்தியஅரசால் தேவையில்லாமல் செயல்படுத்தப்பட்டு வருகிறது,  செய்தித்தாள்களில் வெளியிட்டு வரும் விளம்பரங்கள், அதற்கான செலவினங்கள், மற்றும் கண்ணுக்கு தெரியாத வகையில் செலவழிக்கப்படும் செலவினங்களையும் கட்டுப்படுத்தி, அந்த நிதிகளை மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

அவரின் கோரிக்கையை வலியுறுத்தும் வகையில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளார்.

அவரது கடிதத்தில்,  டெல்லியின் மறுவடிவமைப்புக்காக மத்திய அரசு ஒதுக்கியுள்ள ரூ .20,000 கோடி  நிதியை  ரத்து செய்து,  கோரோனா நிதிக்கு பயன்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டு  வலியுறுத்தி உள்ளார். மேலும், தேவையற்ற செலவினங்களை தவிர்த்து, கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.

‘பி.எம் கேர்ஸ்’ நிதியின் கீழ் உள்ள அனைத்து பணத்தையும் செயல்திறன், வெளிப்படைத்தன்மையுடன் பிரதமரின் தேசிய நிவாரண மாற்ற வேண்டும் என்றும் அதில் கூறி உள்ளார்.

வாழப்பாடி இராம சுகந்தனின் முகநூல் பதிவு – வீடியோ