திருவனந்தபுரம்:
பிரபல இயக்குனர் இயக்குனர் சித்திக் கவலைக்கிடம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கேரளாவை சேர்ந்த இயக்குனர் சித்திக், 1986 ஆம் ஆண்டு ‘பாப்பன் பிரியப்பேட்டை பாப்பன் ‘ என்கிற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். முதல் படத்திலேயே தன்னுடைய வித்தியாசமான கதை களத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். இதை தொடர்ந்து மோகன்லாலை வைத்து ‘நாடோடிக்காட்டு’ என்கிற படத்தை. இயக்கினார். அடுத்தடுத்த வெற்றிகள் மூலம் மலையாள திரையுலக முன்னணி நடிகர்களின் ஃபேவரைட் இயக்குனராகவும் மாறினார்.

இவர் தமிழில் தளபதி விஜய்யை வைத்து, பிரெண்ட்ஸ் மற்றும் காவலன் படத்தை இயக்கினார். அதே போல் விஜயகாந்த் – பிரபு தேவா நடிப்பில் வெளியான, சூப்பர் ஹிட் படமான ‘எங்கள் அண்ணா’ படத்தை இயக்கினார். கடைசியாக தமிழில் அரவிந்த் சாமியை வைத்து ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ திரைப்படத்தை இயக்கி இருந்தார். அதே போல் மலையாளத்தில் 2020 ஆம் ஆண்டு மோகன் லால் நடிப்பில் வெளியான ‘பிக் பிரதர்’ படத்தை இயக்கிய நிலையில் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இப்போது மாரடைப்பு ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு எக்மோ சிகிச்சை நடைபெறுவதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் அவர் குணமாக வேண்டும் என ரசிகர்கள் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.