சென்னை:
தெரியாத எண்களிலிருந்து வரும் வீடியோ அழைப்புகளை ஏற்க வேண்டாம் என்று சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து சைபர் கிரைம் டிஜிபி சஞ்சய் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், செயற்கை நுண்ணறிவு மூலம் வீடியோ கால் மோசடி நடைபெறுவதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், டீப்-ஃபேக் (Deepfake) தொழில்நுட்பம், உண்மையான வீடியோ, படங்களைப் போல் போலியானவற்றை உருவாக்க பயன்படுத்தப்படுகிறது என்றார்.

தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பல்வேறு மோசடிகள் நடைபெறுவதால், தெரியாத எண்களிலிருந்து வரும் வீடியோ அழைப்புகளை ஏற்க வேண்டாம் என்றும், ஆன்லைனில் நீங்கள் பகிரும் தனிப்பட்ட தகவலின் அளவைக் கட்டுப்படுத்துங்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சைபர் கிரைம் கட்டணமில்லா உதவி எண் 1930-இல் புகாரளிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.