தர்மபுரி: இந்து மதத்தையும், இந்து மத வழக்கங்களையும் கடுமையாக விமர்சனம் செய்து வந்த தர்மபுரி தொகுதி திமுக எம்.பி.யான டாக்டர் செந்தில், தற்போது கோவிலுக்கு சென்று, திருநீறு பூசிக்கொண்டு பக்தி பழமாக காட்சி அளிக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தேர்தலுக்காக தனது கொள்கைகளை அடகு வைத்துவிட்டு, இந்து மக்களின் வாக்குகளை பெற பணிந்து, திருநீறு பூசிக்கொண்டு மக்களை ஏமாற்றுகிறார் என விமர்சிக்கப்பட்டு வருகிறது.

இந்து மதத்துக்கு எதிராக கடந்த 5 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த திமுக எம்.பி. செந்தில், தற்போது நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதால், இந்து மக்களின் வாக்குகளை பெறும் நோக்கில் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்கிறாரா என சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. இவர் ஒரு அரசியல் பச்சோந்தி என நெட்டிசன்கள்  திமுக எம்.பி.யை வசைபாடி வருகின்றனர்.

இந்து மக்கள் 80 சதவிகிதம் பேர் வசித்து வரும் தருமபுரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் திமுக எம்.பி. டாக்டர் செந்தில்குமார். இவர் பதவி ஏற்கும்போது, ‘ஈ.வெ.ரா., வாழ்க’ என்ற கோஷத்துடன் உறுதிமொழி எடுத்துக் கொண்டார். தொடர்ந்து இந்து மதத்துக்கு எதிராக பேசி வந்தார். மேலும், இந்து மத வழக்கங்களுக்கு எதிராக பேசி பரபரப்பை ஏற்படுத்தி வந்தார்.

அரசு சார்பில் நடத்த கட்டுமானத்தின்போது நடைபெற்ற  பூமி பூஜை நிகழ்வுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசி இந்து மக்களையும், இந்து மதத்தையும் இழிவுபடுத்தி  பேசி வந்ததுடன்  அரசு அதிகாரிகளையும் கடுமையாக  வசை பாடினார். அதுபோல சேலம் அருகே  அதியமான்கோட்டையில் நடந்த பூமி பூஜையில் அங்கு வைத்திருந்த செங்கல்களை எட்டி உதைத்த காட்சி தொடர்பாக புகைப்படங்களும் வைரலானது.

செந்தில்குமார் எம்.பி.யின் இந்த அகங்காரம் பிடித்த செயலுக்கு  தி.மு.க., நிர்வாகிகளே கடும் கண்டன தெரிவித்தனர். இதையடுத்து, அரசு சார்பில் நடத்தப்படும் பல விழாக்களுளில் கலந்துகொள்ள அவருக்கு அழைப்பு விடுக்கப்படுவது தவிர்க்கப்பட்டது.

இந்த நிலையில், தற்போது திமுக எம்.பி. செந்தில்குமார்,.  கோவிலுக்கு சென்றதாக சில புகைப்படங்களை தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.  சமீபத்தில்,  பாலக்கோடு புதுார் பொன் மாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது. அதில், பங்கேற்ற எம்.பி., செந்தில்குமார், கருவறைக்கு சென்றதாக, அவருடைய சமூக வலைதள பக்கத்தில் புகைப்படத்தை பதிவிட்டிருந்தார்.

அவர் பதிவிட்ட புகைப்படம் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி வருகிறது.

நாடாளுமன்ற தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், அதில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெறும் நோக்கில், இந்து மதத்தை இழிவுபடுத்தி யதால் இந்து மக்கள் ஓட்டு கிடைக்காது என்பதால், மக்களை ஏமாற்றும் வகையில், இந்து கோவிலுக்கு சென்று நெற்றியில் திருநீறு பூசி இருக்கிறார் என்றும், இது இந்து மக்களை ஏமாற்றும் நடவடிக்கை,  இது தேர்தல் நாடகம், இவர் ஒரு பச்சோந்தி, ஓட்டுக்காக எதையும் செய்வார் என என நெட்டிசன்கள் வலைதளங்களில்  கடுமையாக கலாய்த்து வருகின்றனர்.

வீடியோ thanks: Dinamalar