வேலூர்: மக்களின் அறிக்கையாக திமுக தேர்தல் அறிக்கை இருக்கும் என்று கூறிய திமுக எம்.பி. கனிமொழி, பிரதமர் மோடி கூறியபடி, பொதுமக்களின் வங்கி கணக்கில் ரூ.15 லட்சம் வரும் என காத்திருக்கிறோம் என விமர்சித்தார்.

மக்களவை தேர்தலையொட்டி, திமுகவின் தேர்தல்  அறிக்கை தயாரிப்பு குழுவின் தலைவரான கனிமொழி, தமிழக மக்களின் உரிமைகளை மீட்க, ‘ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில், தமிழ்நாடு முழுதும் சுற்றுப்பயணம் செய்து, பல தரப்பு மக்களை சந்தித்து, கருத்துகளை கேட்டறிந்து, தேர்தல் அறிக்கை  தயாரித்து வருகிறார். கனிமொழி தலைமையிலான 11 பேர் கொண்ட குழுவினர்  கடந்த, 5ம் தேதி முதல் வ்வொரு மாவட்டமாக சென்று மக்களை சந்தித்து, அவர்களின் கருத்தை பெற்று வருகிறது.

இந்த குழுவினர் தற்போது வேலூரில் பொதுமக்களை சந்தித்து மனு பெற்றனர். அப்போது பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்களிடையே பேசிய கனமொழி,  கருணாநிதி காலம் முதல், இன்று முதல்வர் ஸ்டாலின் காலம் வரை தொடர்ந்து மக்களை சந்தித்து, அவர்களுடைய கருத்துகளை கேட்டு, அதை பதிவு செய்து தேர்தல் அறிக்கையாக தி.மு.க., உருவாக்கி வருகிறது.

உங்களுடைய கோரிக்கை, கருத்துக்களை, அறிவுரைகளை நாங்கள் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டு, பரிசீலித்து முதல்வரிடம் கலந்துரையாடி, பின் முழுமையான தேர்தல் அறிக்கை உருவாக்கப்படும் என்றார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது,  திமுக  தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.  அதுபோல, தி.மு.க., பொய்யான வாக்குறுதியை அளித்துள்ளதாக முன்னாள் முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். அவர் ஆட்சிக் காலத்தில், தமிழகம் எல்லா துறைகளிலும் பின்நோக்கி தான் சென்றது.

பிரதமர் மோடி அனைவருடைய வங்கிக் கணக்கில், 15 லட்சம் இருக்கும் என்றார்.  அது எப்போது போடப்படும் என கேள்வி எழுப்பியவர், அதற்காக காத்திருக்கிறோம் என்றவர், பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், தி.மு.க., தேர்தல் அறிக்கை இருக்கும் என்றார்.

மேலும், நாங்கள் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று, அங்கே இருக்கக்கூடிய விவசாய மக்கள், தொழிலாளர்கள், தொழில் அதிபர்கள், தொழில் முனைவோர், மாணவர்கள் என பலதரப்பட்ட மக்களை சந்தித்து அவர்களின் கருத்துகளை கேட்டோம். தேர்தல் அறிக்கையை உருவாக்ககூடிய பணியில் இருக்கிறோம். உங்களது கோரிக்கைகள், கருத்துகளை, எங்களுக்கும் தரும் அறிவுரைகளை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டு, அதை பரீசிலனை செய்து பின் முதலமைச்சருடன் கலந்துரையாடி தேர்தல் அறிக்கையை உருவாக்க இருக்கிறோம். திமுகவால் தான் நாட்டின் தலையெழுத்தை, இன்றைய நிலையை மாற்றி . திமுக தேர்தல் அறிக்கை மக்களின் தேர்தல் அறிக்கையாக இருக்கும் என்று கனிமொழி கூறினார்.