அறிவோம் தாவரங்களை- நெல்லி

நெல்லி (AMLA)

 2000 ஆண்டுகளுக்கு முன்பே அதியமான் கைக்குக் கிடைத்த அருநெல்லி!

கி.பி.1030 இல் ஆல்பிருணி என்ற அரபு மாமேதை,’

மகத்துவம் மிகுந்த மருத்துவக்கனி’ எனக் குறிப்புரை எழுதியதால் நீ குன்றின்மேல் விளக்கானாய்!

6 மீ. உயரம் வளரும் பெருநெல்லி! திருமாலின் நிறம் பெற்ற கருநெல்லி!

குபேரன் வழிபட்ட நறுநெல்லி!

தென்னிந்திய நாட்டின் பூக்கும் தாவரம் நீ!

ஏழைகள் விரும்பும் ஆப்பிள் கனி!

சித்த மருத்துவத்தின் தங்க பஸ்பம்!

நீரிழிவு நோய்க்கு நிகரற்ற நிவாரணி!

கொழுப்பை குறைக்கும் சிறப்பு மருந்து!

ஆஸ்துமாவை அகற்றும் அகத்தியர் விருந்து!

எரிச்சல், குத்தலுக்கு ஏற்றதோர் தேன்கனி!

இதயத்தைத் திடமாக்கி, முகத்திற்கு அழகு ஏற்றும் மூலச் சூரணம்!

மூன்று ஆப்பிள் பழத்திற்கு ஒரு நெல்லிக்காய் சமமாகும், 30 தோடம் பழத்திற்கு ஒரு நெல்லிக்கனி சமமாகும்!

600மி.கி. வைட்டமின் சி சத்தக் கொண்ட அரிய மருந்துக்காய்!

ஊறுகாய்க்கு உகந்த காய்!

இனிப்பு, துவர்ப்பு, புளிப்பு என முச்சுவை  பெற்ற நற்கனியே!நீ

இச்சகம் உள்ள வரை எழில் பெற்று வாழியவே!

நன்றி : பேரா.முனைவர். ச.தியாகராஜன்((VST)

நெய்வேலி.

📞9443405050