அறிவோம் தாவரங்களை – மருதாணி

மருதாணி (Lawsonia Inermis)

ஆப்பிரிக்கா, ஆசியா நாடுகளில் பயன்பாட்டில் உள்ள அலங்காரச் செடி நீ !

வேலிகளில் தோட்டங்களில் காணக் கிடைக்கும் சிறு இலைச் செடி நீ!

5.6 மீ. வரை உயரம் வளரும் சிறு வகை மரம்/புதர் செடி நீ!

அழவணம், ஐவணம், மருதோன்றி, சரணம் எனப் பல்வகைப்  பெயர்களில் விளங்கும் ஒருபொருள் குறித்த பலசொல் கிளவி நீ

கண் குளிர்ச்சி, நகசுத்தி, இளநரை, தூக்கமின்மை, தீக்காயம், வயிற்றுப்போக்கு, கல்லீரல், தலைவலி, வீக்கம், ரத்த அழுத்தம், காயங்கள், உள்ளங்கால் ஆணி, தொண்டை கரகரப்பு, அழுக்கு சேற்றுப் புண்கள், தோல் நோய், வெள்ளைப்படுதல், அழுக்குப் படை ஆகியவற்றுக்கு ஏற்ற அற்புத மூலிகை நீ!

முகமது நபிகள் விரும்பிய வாசனைத் தைலச் செடி நீ!

மெஹந்தி வணிகத்தின்  மேன்மைச் செடி நீ !

அகத்தியர் குணபாடம் போற்றும் அற்புதச் செடி நீ!

இலை, பட்டை, மலர்கள் என எல்லாம் பயன்படும் நல்ல செடியே!

துஷ்ட சக்திகளை விரட்டும் காவல் செடியே!

மணப்பெண்களின் கை, கால்களுக்கு அழகு சேர்க்கும் அற்புதச் செடியே!

மகாலட்சுமியின் அம்சச் செடியே!

நீவிர் மண்ணும் விண்ணும் உள்ளவரை வளமுடன், செழிப்புடன் வாழ்க, வளர்க, உயர்க!

நன்றி : பேரா.முனைவர். ச.தியாகராஜன்(VST)

நெய்வேலி.

📱9443405050.