அறிவோம் தாவரங்களை – வில்வ மரம்

வில்வ மரம் .(Aegle marmelos)

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய பழமை மரம் நீ!

இந்தியா, இலங்கை, ஆசிய நாடுகளில் செழித்து வளரும் செம்மரம் நீ!

சைவசமயத்தின் ஆன்மீக மரம் நீ !

வில்வை, குசாபி, கூவிளம் எனப் பல்வகைப் பெயர்களில் விளங்கும் பசுமை மரம் நீ!

மகாவில்வம், அகண்ட வில்வம் என இருவகைகளில் இருக்கும் பெரிய மரம் நீ!

குறிஞ்சிப்பாட்டில் இடம்பெற்ற ‘கூவிளம் பூ’ மரம் நீ!

வள்ளல் எழினியின் ‘குடிப்பூ’ மரம் நீ!

“பெரும் பஞ்சமூலம்” போற்றும்  பெரிய மரம் நீ !

மூக்கடைப்பு, அஜீரணம், காசம், மன அழுத்தம், உடல் ஆரோக்கியம், சர்க்கரை நோய், மூலம், குடல் கோளாறு , வீக்கம், கபம், ஆஸ்துமா, வெள்ளைப்படுதல் ஆகியவற்றுக்கு ஏற்ற அற்புத நிவாரணி நீ!

திருஞானசம்பந்தர் போற்றும் தெய்வம்  நீ!

திருவையாறு ,திருவல்லம், திருஆனைக்கா என நூற்றுக்கும் மேற்பட்ட கோயில்களில் போற்றப்படும் தல மரம் நீ!

அஸ்வமேத யாகப்பலன் தரும் பயன்மரம் நீ!

ஆப்பிள், மாதுளை பழங்களை விட அதிகச் சத்துடைய அதிசய கனி மரமே!

சர்பத் தயாரிக்க கனிகள் தரும் இனிய மரமே!

ஆண்டிற்கு 400 பழங்கள் வரை தரும் கற்பகத் தருவே!

‘பழங்களின் ராஜா’ எனப் பெயர் பெற்ற கனி மரமே!

அர்ச்சனைக்கு இலை தரும் அரிய மரமே!

சித்த மருத்துவத்தில் சிறந்த மூலிகையே!

திரிசூலத்தின் குறியீடான இலை வடிவ  மரமே!

’வில்பத்ர’ பூசையின் முதன்மைப் பொருளே!

முள்ளில்லாத திருவெண்காட்டு கோயிலின் முதன்மை மரமே!

இலை, பட்டை, வேர், பழம் என எல்லாம் பயன் தரும் நல்ல மரமே!

சிவ மூலிகைகளின்  சிகரமே!

ஆரோக்கியத்தின் அரணே!

நீவிர்  சீரோடும்  சிறப்போடும் வாழ்க! வளர்க! வெல்க!

நன்றி : பேரா.முனைவர்.

ச.தியாகராஜன்

நெய்வேலி

📱9443405050.