அருள்மிகு காட்டழகிய சிங்கர் திருக்கோவில் பற்றிய சில தகவல்கள்

அருள்மிகு காட்டழகிய சிங்கர் திருக்கோவில் திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள பெருமாள் கோவிலாகும்.
மூலவர் : காட்டழகிய சிங்கர்

ஸ்தல விருக்ஷம் : வன்னி மரம்
ஊர் : ஸ்ரீரங்கம்
மாவட்டம் : திருச்சி
ஸ்தல வரலாறு :-
முக்காலத்தில் இப்பகுதி காடாக இருந்தது. காட்டு யானைகளின் தொந்தரவைச் சமாளிக்க முடியாமல் மக்கள் திண்டாடினர். யானைகளை அடித்து விரட்டுவது இயலாத காரியமாக இருந்தது.
அவற்றை அழிக்க எண்ணுவதே பாவ கார்யம் என்பதால் இருதலைக் கொள்ளி எறும்பாகத் தவித்த மக்கள், நரசிம்ஹருக்கு கோவில் எழுப்பி வழிபாடு செய்தபின் யானைகளின் தொந்தரவு குறைந்தது. எனவே இங்குள்ள பெருமாள் “காட்டழகிய சிங்கர்” எனப்பட்டார்.
ஸ்தலப்பெருமை :-
கர்பக்ரஹத்தில் சுமார் 8 அடி உயரத்தில் லக்ஷமிந்ருசிம்ஹர், மகாலக்ஷமியை தன் இடது தொடையில் உட்கார வைத்து ஆலிங்கன நிலையில் உள்ளார்.’என்னை நம்பியவர்களை நான் கைவிட்டதில்லை’ என்பதுபோல அபயஹஸ்தம் காண்பிக்கிறார் .
ஸ்தலச்சிறப்பு :-
பொதுவாக அனைத்து கோவில்களிலும் கிழக்கு பார்த்த சன்னதியில் இருக்கும் பெருமாள், இங்கு மேற்கு பார்த்த சன்னதியில் உள்ளார்.
பிரார்த்தனை :-
பிரதோஷ காலங்களில் வழிபாடு செய்தால் உத்தியோகம், மகப்பேறு, திருமணத்தடை நீங்கும்.
நேர்த்திக்கடன் :-
வேண்டுதல் நிறைவேறியவர்கள் பெருமாளுக்குத் திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்.