டில்லி 

டில்லி உயர்நீதிமன்றம் ராகுல் காந்தி மீது நடவடிக்கை எடுக்கத் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு  இட்டுள்ளது. 

கடந்த மாதம் 22 ஆம் தேதி ராஜஸ்தானில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசுகையில், பிரதமர் மோடி ஒரு அதிர்ஷ்டமில்லாதவர். மக்களின் கவனத்தைப் பிரதமர் மோடி திசைதிருப்பும் வேலையில் ஈடுபடுகிறார். பிரதமர் நரேந்திர மோடியை பிக்பாக்கெட் என விமர்சித்துள்ளார்.

இவ்வாறு ராகுல் காந்தி பேசியதற்க் பாஜகவினரிடையே கடும் எதிர்ப்பு எழுந்தது.  இதையொட்டி டில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்தப் பேச்சுக்கு விளக்கம் அளிக்குமாறு ராகுல் காந்திக்குத் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.

இன்று டில்லி உயர்நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணையின் போது

“பிரதமர் மோடி குறித்து ராகுல் காந்தியின் பேச்சு ஏற்கத்தக்கதல்ல. ராகுலுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யவோ, இதுபோன்ற பேச்சுகளைத் தடுக்க உரிய வழிகாட்டு நெறிமுறைகளை ஏற்படுத்த நாடாளுமன்றத்திற்கு உத்தரவிட முடியாது. ராகுல்காந்தி மீது தேர்தல் ஆணையம் 8 வாரங்களில் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்”

என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.