ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள ‘பதான்’ படத்தில் இருந்து ‘பேஷாரம் ரங்’ என்ற பாடல் இரண்டு நாட்களுக்கு முன் வெளியானது.

இதுவரை 36 மில்லியன் வியூஸ்-களை தாண்டியுள்ள இந்த பாடல் குறித்தும் தீபிகா படுகோன் ஆட்டம் குறித்தும் பாஜக-வினர் பொங்கி வருகின்றனர்.

வெட்கமற்ற நிறம் என்று பொருள் படும் இந்தப் பாடல் முழுவதும் தீபிகா படுகோன் பிகினி தவிர வேறு எந்த உடையும் அணியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பாடலின் இறுதியில் காவி நிற உடையணிந்து ஷாருக்கான் மீது பாயும் தீபிகா படுகோன் ‘இன்று இரவு என் வாழ்க்கை முழுமைபெறும்’ என்று ஷாருக்கானைப் பார்த்துப் பாடுகிறார்.

இந்த காவி உடையும் வெட்கமற்ற நிறம் என்ற இந்த பாடலின் தலைப்பும் பாடல் வரிகளும் பாஜக ஆதரவாளர்களிடையே சூட்டை கிளப்பிவிட்டுள்ளது.

இதுகுறித்து பேசியுள்ள மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக அமைச்சர் நரோத்தம் மிஷ்ரா படத்தில் தீபிகா படுகோன் ஆடையின் நிறத்தை மாற்றாவிட்டால் மத்திய பிரதேச மாநிலத்தில் பதான் படத்தை திரையிட விடமாட்டோம் என்று மிரட்டல் விடுத்திருக்கிறார்.