தற்கொலைக்கு எதிராக பிரசாரம் செய்த சனாஇக்பால் விபத்தில் மரணம்! கொலையா?

Must read

ஐதராபாத்,

ற்கொலைக்கு எதிராக நாடு முழுவதும் பைக்கில் சென்று பிரச்சாரம் செய்த சாதனைப்  பெண் சனா இக்பால், கார் விபத்தில் மரணமடைந்தார்.

இது திட்டமிட்ட கொலை என்று சனாவின் தாய் குற்றம் சாட்டி உள்ளார்.

தெலங்கான மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த சனா இக்பால். இவர் தற்கொலை முடிவுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாடு முழுவதும் பைக் மூலம் சென்று மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தார்.

அவரது விழிப்புணர்வு பயணத்துக்கு  இளைஞர்கள், பெண்கள், மாணவர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில், நேற்று  சனா இக்பால் தனது கணவர் அப்துல் நதீம் உடன் காரில் சென்றுக் கொண்டிருந்தார். ஐதராபாத்தின் நரசிங்கி என்ற பகுதியில் இவர்கள் சென்றபோது எதிர்பாராத வகையில் சாலை தடுப்பில் மோதி விபத்துக்கு உள்ளானது.

இந்த கோர விபத்தில் சனா இக்பால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  அவரது கணவர் அப்துல் நதீம் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், சனா இக்பாலின் தாய், இது விபத்து அல்ல கொலை என்று குற்றம் சாட்டி உள்ளார்.

சனாவுக்கும் அவரது கணவருக்கும் இடையே சில காலங்களாக  பிரச்சினைகள் இருந்தாகவும், அதன் காரணமாக சனா கொல்லப்பட்டிருக்கலாம் என்றும், இது ஜோடிக்கப்பட்ட விபத்து, அது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More articles

Latest article